பட்டனைத் தட்டினால் கைமேல் பிரியாணி! எங்கே?

பட்டனைத் தட்டினால் கைமேல் பிரியாணி! எங்கே?

10 ஆண்டுகளுக்கு முன்பு பிரியாணி சாப்பிட வேண்டுமென்றால் அது கிடைக்கும் இடத்திற்கு நாம் தான் தேடிக் கொண்டு சென்றாக வேண்டும். பிறகு இந்த ஸ்விக்கி, ஸொமாட்டா வருகைக்குப் பின் உட்கார்ந்த இடத்திலேயே பட்டனைத் தட்டி பிரியாணி மட்டுமல்ல இன்னும் என்னென்னவெல்லாமோ ஆர்டர் செய்து வரவழைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த முறைகளில் கூட பிரியாணி வேண்டும் என்று ஆர்டர் செய்தால், நமக்காக யாரோ ஒருவர் அங்கே போய் பாக் செய்த உணவை வாங்கி வர வேண்டும்.

அதே போல நாம் நேரடியாகக் கடைகளுக்கே சென்று சாப்பிடும் போதும் கூட, ஆர்டர் செய்தால் உணவு கிடைக்க 15 முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமாகலாம்.

இந்த தாமதத்தைத் தவிர்க்கும் விதமாக சென்னை , கொளத்தூரில் உள்ள ‘பாய்வீட்டுக் கல்யாணம்’ எனும் உணவகத்தில் பட்டனைத் தட்டினால் பிரியாணி, அதற்கான ரய்தா, கத்தரிக்காய் கொத்சுவுடன் பாக் செய்யப்பட்ட நிலையில் பாக்கெட்டாகவே வெளியில் வரும் விதமாக இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த தொழில்நுட்பம் முதல்முறையாக இந்த உணவகத்தில் தான் பயன்பாட்டில் உள்ளதென்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன. India's First manless takeaway' எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த தொழில்நுட்பத்திற்கு அந்தப் பகுதி மக்களிடையே மட்டுமல்ல ஸ்விக்கி, ஸொமாட்டோக்காரர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இங்கு டெலிவரிக்கு ஆட்கள் இல்லை.எல்லாமே இயந்திரம் தான். தேவையான உணவு வகையை கிளிக் செய்து பட்டனைத் தட்டினால் உடனே சடுதியில் பிரியாணி வந்து விடுகிறது. பில்லும் தான்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com