தமிழகத்தில் நாளை 1100 இடங்களில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் நாளை 1100 இடங்களில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்!

சென்னை:  தமிழக அரசு கடந்த மாதம் மின் கட்டணத்தை உயர்த்தி மாற்றியமைத்தது. அதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன் ஆவின் பால் ஆரஞ்சு நிற பாக்கெட் லிட்டருக்கு ரூ.12 உயர்த்தி அறிவித்தது. இதற்கு பா.ஜ.க. உட்பட மற்ற கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து.

இந்த விலையேற்ற உயர்வை கண்டித்தும், அதை திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 15-ந்தேதி மக்களை திரட்டி தமிழகத்தில் போராட்டம் நடத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

அதன்படி நாளை (15-ந்தேதி) அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. “இந்தப் போராட்டத்தில் அடிதட்டு மக்களும் கலந்து கொள்ளும் வகையில் நடத்த வேண்டும்” என்று பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.

இது கட்சியின் நிர்வாக வசதிக்கு உதவும் வகையில் ஒவ்வொரு மாவட்டமும் 10-க்கும் மேற்பட்ட மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி 1100 மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலங்கள் வாரியாக ஆர்ப்பாட்டம் நடத்த பா.ஜ.க.வினர் திட்டமிட்டுள்ளார்கள்.

நாளை 1100 இடங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஈரோட்டில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னையில் 66 இடங்களில் நடைபெறுகிறது.

அடையாறு டெலிபோன் எக்ஸ்சேன்ஞ் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜனும், மடிப்பாக்கத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் துணை தலைவர் கரு.நாகராஜனும் கலந்து கொள்கிறார்கள்.

இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் உள்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com