“காவல்துறை உங்கள் நண்பன்” என்பதெல்லாம் வெறும் வாய்ஜாலம்தான் என நிரூபித்த சேலம் காவலர்

“காவல்துறை உங்கள் நண்பன்” என்பதெல்லாம் வெறும் வாய்ஜாலம்தான் என நிரூபித்த சேலம் காவலர்

மீபத்தில்தான் சேலம் எஸ் பி யின் சுவாரஸ்யமான டிரிபிள்ஆர் தத்துவம் பற்றி சிலாகித்திருந்தோம். அது எல்லாம் வேலைக்கே ஆகாது நாங்கள் எங்களுக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படித்தான் இருப்போம். எங்களை ஒன்றும் செய்யமுடியாது ஏன்னா நாங்க போலீஸ் என்று உதவி கோரியவரிடம்  ஆணவத்துடன் நடந்துள்ளார் சேலம் காவலர் ஒருவர்.” இவங்களை எல்லாம் திருத்தவே முடியாது இவர்களைப் போன்ற ஒரு சிலர் செய்யும் தவறுகளால் நல்ல குணம், செயல் உடைய மக்களுக்கு உதவும் காவலர்களுக்கும் கெட்டபெயர்..” என்று நொந்து கொள்கின்றனர் மக்கள். அப்படி அந்தக் காவலர் என்னதான் செய்தார்? 

     சேலத்தில் நள்ளிரவு நேரத்தில் தவித்த மூதாட்டி குறித்து காவல்துறைக்கு  தகவல் தெரிவித்த வாலிபர் மீது காட்டமான எஸ் எஸ் ஐ  அவரது செல்போனை பொறுத்துக் கொண்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் களரம்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன். மெக்கானிக்கான இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் களரம்பட்டி பகுதியில் தனியாக தடுமாறியபடி செல்வதைப் பார்த்துள்ளார். அவருக்கு உதவி செய்யும் நோக்கில் அந்த மூதாட்டியிடம் அவரைப் பற்றி கேட்டபோது அவருக்கு சரியாக பதில் கூற தெரியவில்லை. இதையடுத்து அவருக்கு உதவி செய்யும் நோக்கில் பிரபாகரன் காவல் கட்டுப்பாடு அறைக்கு (100-க்கு) போன் செய்து தகவல் தெரிவித்தார். தகவலைப் பெற்றுக் கொண்ட காவல்துறை  கன்ட்ரோல் ரூம்,  கிச்சிப்பாளயத்தை சேர்ந்த எஸ் எஸ் ஐ ஒருவரை அனுப்பி சம்பவ இடத்திற்கு வைத்தனர்.

      அதன்படி சம்பவ இடம் வந்து பார்த்த எஸ் எஸ் ஐ  வந்த வேகத்தில் பிரபாகரனை திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் அவரிடம் இருந்த செல்போனை வாங்கிக் கொண்ட அந்தக் காவலர் ”பாட்டியின் வீடு எங்கே என கண்டு பிடித்து நீயே அவரை அங்கு ஒப்படைத்து விட்டு பின்னர் வந்து செல்போனை வாங்கிக்கொள்” என்று தெரிவித்து விட்டுச் சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சியானாலும் மனித நேயத்துடன் இரவு முழுவதும் பிரபாகரன் பாட்டியை அங்குள்ள கோவிலில் வைத்து பார்த்துக் கொண்டார். விடிந்ததும் பாட்டியை அப்படியே விட்டுச் செல்ல மனமின்றி உதவி கேட்டும் செல்போனை வாங்கி கொண்டு தன்னைத் தவிக்க விட்ட காவலரைப் பற்றி உயர் அதிகாரியிடம் தெரிவிக்க நினைத்த பிரபாகரன் நேற்று காலை அந்த மூதாட்டியை அழைத்துக்கொண்டு சேலம் கமிஷனர் அலுவலகம் வந்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

    அதில் “வயதான மூதாட்டிக்கு உதவி செய்ய போலீசாருக்கு தகவல் தெரிவித்தேன். அதன்படி வந்த எஸ் எஸ் ஐ என்னை மோசமாக திட்டி அவமானமாக பேசியதோடு எனது செல்போனையும் பிடுங்கிச்சென்று விட்டார். இரவு முழுவதும் பாட்டியை நான்தான் பார்த்துக் கொண்டேன். அவர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது செல்போனையும் மீட்டுத் தர வேண்டும்” என தெரிவித்திருந்தார். புகாரை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து துணை கமிஷனர் லாவண்யா மூதாட்டியை உதவி கமிஷனர் அசோகன் இடம் ஒப்படைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அந்த மூதாட்டியின் முகவரியை கண்டுபிடித்த போலீசார் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட  எஸ் எஸ் ஐ டம் விசாரணை நடந்து வருகிறது.   

    “காவல்துறை உங்கள் நண்பன் என்பதெல்லாம் வெரும் வாய்ஜாலம் தானா” என மெக்கானிக் பிரபாகரன் தரப்பினருடன் பொதுமக்களும் ஆதங்கப்பட்டனர். இந்தக் காவலர் போன்றவர்களாலேயே குற்றத்தைப் பார்த்தாலும் அதை முறையாக தெரிவிக்கும் எண்ணமின்றி கண்டும் காணாதது போல் கடந்து சென்று விடுகிறார்கள் பெரும் பாலான மக்கள். கடமைகளை புறக்கணிக்காமல் இருந்தாலே மக்கள் உங்களை மதிப்பார்கள் காவலர்களே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com