உமாஜின்: சென்னையில் நடைபெறும் மூன்று நாள் டெக்னாலஜி மாநாடு!

உமாஜின்: சென்னையில் நடைபெறும் மூன்று நாள் டெக்னாலஜி மாநாடு!

தமிழ்நாடு மின்னணு நிறுவனமான எல்காட் சார்பில் ஒரு சர்வதேச மாநாட்டை தமிழக அரசு ஏற்பாடு செய்திருக்கிறது. உமாஜின் சென்னை 23 என்றும் பெயரில் நடைபெற்றுவரும் நிகழ்வு, நேற்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ஆரம்பமானது. வரும் சனிக்கிழமை வரை நடைபெறவிருக்கும் மாநாட்டில் உலகெங்கும் இருந்து ஏராளமானவர்கள் பங்கேற்கிறார்கள்.

உலகம் முழுவதும் இருந்து தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், கொள்ளை வகுப்பாளர்கள், முன்னணி தொழில்முனைவோர், ஸ்டார்ட் அப் சார்ந்த நிபுணர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று வருகிறார்கள். ஏறக்குறைய 400 பேர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க இருக்கிறார்கள்.

கடந்து ஒரு மாதமாகவே எல்காட் சார்பாக நிகழ்வுக்கான ஏற்பாடுகள் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதுவரை 12 ஆயிரம் பேர் நிகழ்வில் பங்கேற்பதாக இணையத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நடைபெறும் முக்கியமான தொழில்நுட்பம் சார்ந்த சங்கமமாக நிகழ்வு முன்னெடுக்கப்படுகிறது.

இது போன்ற நிகழ்வுகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டியிருக்கும். தற்போது நம்மாலும் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தமுடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஆசியாவின் மிகப்பெரிய மாநாடாக இது மாறியிருக்கிறது. பெரிய அளவில் மாநாட்டிற்கு வரவேற்பு கிடைத்திருப்பதாக தமிழக தகவல் தொடர்புத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்திருக்கிறார்.

மூன்று நாள் சங்கமத்தில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படவிருக்கும் புதிய தொழில்நுட்பம் சார்ந்த முன்னெடுப்புகள் குறித்து திட்டமிடலும், பல்வேறு அமைப்புகளில் பங்களிப்பும் குறித்தும் பேசப்படவிருககிறது. தகவல் தொழில்நுட்பத்தை பரவலாக்குவதில் புதிய ஆராய்ச்சி மையங்கள் அமையவிருக்கின்றன.

அடுத்து வரும் பத்தாண்டில் மூன்று தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையங்கள் தமிழ்நாட்டில் அமையவிருக்கின்றன. ஐ.ஐ.டி போன்று தகவல் தொழில்நுட்ப பூங்காவாக உருவாக இருக்கிறது. திருச்சி, மதுரை பகுதியில் ஒரு தகவல் தொழில்நுட்ப பூங்காவும், கோயம்புத்தூர் கிருஷ்ணகிரியில் இன்னொரு பூங்காவும் அமையவிருக்கின்றன.

ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பத்துக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளை இணைத்து ஒரு ஈகோ சிஸ்டத்தை உருவாக்கி இதன் மூலம் திறன் மேம்பாட்டையும், வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்க முடியும் என்று எல்காட் அமைப்பு நம்பிக்கை தெரிவிக்கிறது.

தமிழ்நாட்டை ஐ.டி துறையின் முன்னுக்கு கொண்டு வரவும், ஐ.டி துறை கட்டமைப்பை வலுப்படுத்தவும், நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுததி ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டுவதற்காகவும் இதுபோன்ற நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com