பாம்பை கடித்து துப்பியதால் கம்பி எண்ணும் இளைஞர்கள்.

பாம்பை கடித்து துப்பியதால் கம்பி எண்ணும் இளைஞர்கள்.

ணையத்தில் ட்ரெண்ட் ஆக வேண்டும் என ஆசைப்பட்டு, தண்ணீர் பாம்பின் தலையை வாயால் கடித்துத் துப்பி வீடியோ பதிவிட்ட 3 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.  

ராணிப்பேட்டை மாவட்டம் சின்னகைனூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன், சூர்யா மற்றும் சந்தோஷ் என்ற மூன்று இளைஞர்கள் கடந்த மாதம் 15 ஆம் தேதி அவர்கள் வீட்டின் அருகே வந்த தண்ணீர் பாம்பை கையில் பிடித்துள்ளனர். இதில் மோகன் என்பவர் அந்த பாம்பைத் துன்புறுத்தி அதன் தலையை வாயால் கடித்து துப்பியுள்ளார். அதை வீடியோ பதிவு செய்த சக நண்பர்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர். 

எதிர்பாராதவிதமாக இந்த காணொளி வைரல் ஆனதில் வனத்துறை அதிகாரிகளின் கண்ணில் பட்டுவிட்டது. இதைப்பார்த்த சென்னை வனத்துறை வைல்டு லைஃப் கிரைம் கண்ட்ரோல் பிரிவினர், ஆற்காடு வனச்சரகருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து இந்த மோசமான செயலில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களையும் ஆற்காடு வனத்துறை போலீசார் கைது செய்துள்ளனர். 

மேலும் அந்த இளைஞர்கள் மீது வனவிலங்குகளை துன்புறுத்துதல், அதை காணொளி எடுத்து பதிவேற்றுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. பின்னர் ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர் படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். எங்கள் வீட்டில் பாம்பு நுழைந்தால், அதை நாங்கள் அடித்துக் கொன்றால் போலீசார் எங்களை கைது செய்வார்களா? என்று. இந்த கேள்விக்கு போலீசார் தரப்பில் என்ன பதில் கூறப்படுகிறது என்றால், பொதுவாகவே வனவிலங்குகள் பாதுகாக்கப்பட வேண்டியவை. இதில் பாம்புகளும் வனவிலங்கின் பிரிவிலேயே வரும். உங்கள் வீட்டில் நுழைந்த பாம்பை தற்காப்பிற்காக அடித்துக் கொல்வது எந்த வகையிலும் தவறாகாது. ஒருவேளை நீங்கள் அடித்துக் கொல்வதையோ அல்லது அவற்றை துன்புறுத்து வதையோ காணொளியாக எடுத்து இணையத்தில் பதிவேற்றினால்தான் உங்களுக்குப் பிரச்சனை. 

வனவிலங்குகளை அடிப்பதையோ, துன்புறுத்து வதையோ, கொல்வதையோ ஒருபோதும் சட்டம் ஏற்காது. எனவே இணையத்தில் வைரல் ஆவதற்கு ஆசைப்பட்டு இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு, தேவையில்லாத சட்ட சிக்கல்களில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என போலீசார் பொதுமக்களை எச்சரிக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com