ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவரா நீங்க? இத அவசியம் படியுங்க.

ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவரா நீங்க? இத அவசியம் படியுங்க.

ணினியில் ஏற்படும் வைரஸ் தாக்குதல் போலவே, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களும் மால்வேர், ஸ்பைவர் வைரஸ்களால் எளிமையாக தாக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த தகவல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களை கதிகலங்க வைத்துள்ளது. 

தற்போதுள்ள ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில், மொபைல் ஆப்ஸ் மூலமாக பயனர்களுக்கு தெரியாமலேயே அவர்களுடைய தரவுகளை ரகசியமாகத் திருடலாம் என்ற செய்தி இந்தியாவில் மட்டுமின்றி, உலகளவில் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, நீங்கள் சீன தயாரிப்புகளால் உருவான ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தினால் நிலைமை இன்னும் மோசம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.  

சீனாவில், ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதை தரவு சேகரிப்பு மோசடி என்று கூறுகிறார்கள். பயனர்களுக்கு தெரியாமலேயே அவர்களின் ஸ்மார்ட்போனில் உள்ள விஷயங்கள் அனைத்தும் மூன்றாம் நபர்கள் ஸ்பைவேர், மால்வேர்  போன்றவற்றைப் பயன்படுத்தி திருடி விடுகிறார்களாம். 

Realme, Oppo, OnePlus மற்றும் Xiaomi நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்களில் முன்கூட்டியே நிறுவப்பட்ட ஆப்கள் மூலம், பயனர்களின் தரவுகள் சேமிக்கப்படுகின்றன. என ஓர் ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில், சீனாவில் தயாரிக்கப்பட்ட சாதனங்களை சோதித்தனர். இதில் பயனர்களின் தரவுகள் கசிந்துள்ளதா எனக் கண்டறிய நெட்வொர்க் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது பயனர்களின் தரவை அவர்களுக்கே தெரியாமல் அனுப்பும் அம்சங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. மேலும், கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் மூன்றாம் தரப்பு சேவை அனைத்தையும் நிறுத்தி சோதனை செய்தனர். 

ஆய்வின் முடிவில் பயனர்களுடைய மொபைல் எண்கள், ஜியோ லொகேஷன், காண்டாக்ட், IMEI எண், விளம்பர ஐடி மற்றும் மொபைல் தொடர்பான அடிப்படை தகவல்கள் மொத்தமாக சேகரிக்கப்பட்டு திருடப்படுவது தெரியவந்துள்ளது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் சந்தையில் உலகின் மிகப்பெரிய வர்த்தகத்தைக் கொண்டிருக்கும் நாட்டிலேயே பயனர்களின் தரவு திருடப்படுவது இந்த ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 

இதனால் சீன ஸ்மார்ட்போன்களில் தனியுரிமைப் பாதுகாப்பு மிகவும் மோசமாக உள்ளது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மக்கள் எவ்வித அச்சமும் இன்றி தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்துவதற்கு, ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். அவற்றில் முக்கியமானவை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தால், இதுபோன்ற தனியுரிமை மீறல்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com