ஒலிபெருக்கிகளின் வளர்ச்சியும் புரட்சியும்

ஒலிபெருக்கிகளின் வளர்ச்சியும் புரட்சியும்

ல்வேறு விதமான ஸ்பீக்கர் சாதனங்கள் சந்தையில் தற்போது காணப்படுகின்றன. ஒரு காலத்தில் குழாய் கட்டி பாடல் ஒலித்த தெருக்களில், தற்போது சவுண்ட் பார்கள் பூம் பூம் சத்தத்தைக் கொடுத்து நம்மை அதிரச்செய்கின்றன. இத்தகைய பரிணாம  மாற்றங்களைப் பெற்றிருக்கும் ஸ்பீக்கர் தொழில்நுட்பம் பற்றி நாம் அறிய வேண்டாமா? 

பல ஆண்டுகளாக ஸ்பீக்கர்களின் தொழில்நுட்பம் வித்தியாசமான மாற்றங்களைப் பெற்றுள்ளது. கிராமஃபோன் காலத்திலிருந்து இன்றைய வயர்லெஸ் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் வரை, இவை ஒரு வியத்தகு மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளன. ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்ப ஸ்பீக்கர்கள் பெரியதிலிருந்து சிறியது வரை மிகவும் திறன்வாய்ந்த மேம்படுத்தலோடு மாற்றத்தை அடைந்துவருகின்றன.

ஸ்பீக்கர் தொழில்நுட்பத்தின் வரலாறு.

1876ஆம் ஆண்டில் அலெக்சாண்டர் கிரஹாம்பெல் தொலைபேசியைக் கண்டுபிடித்த காலத்தில் இருந்தே ஸ்பீக்கர்களின் பயன்பாடு இருந்துள்ளதை அறிய முடிகிறது. முதன்முதலில் உருவாக்கப்பட்ட ஒலிபெருக்கியில் அதிர்வை ஏற்படுத்தும் சவ்வு போன்ற ஒரு பொருளும், காந்தம் மற்றும் சுருள் காயிலும் இருந்தது. மின்சார சிக்னல் சுருள் காயில் வழியாக பாயும்போது, காந்தப்புலத்தை ஏற்படுத்தியது.  உருவான காந்தப்புலம் சவ்வு பகுதியில் அதிர்வை ஏற்படுத்தி இசைப் பெருக்கியாக செயல்பட்டது.  

1990களின் முற்பகுதியில் கிராமஃபோன் கண்டு பிடிக்கப்பட்டது. இது ஓர் பதிவு செய்யப்பட்ட சுழலும் தட்டில் ஊசியைப் பயன்படுத்தி அதன் அதிர்வுகளைப் பெரிய சத்தமாக மாற்றியது. பின்னர் 1920களில் முதல் முறை எலக்ட்ரிக் ஸ்பீக்கர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் டயப்க்ரம் (diaphgram) மற்றும் எலக்ட்ரோ மேக்னெட் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி சத்தத்தை உருவாக்கினார்கள். 

1940களில் ட்ரான்சிஸ்டர்களின் கண்டுபிடிப்பானது, ஸ்பீக்கர் தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. பெரிய ஸ்பீக்கர்கள்  போய், அவை சிறிய வடிவில் மிகவும் திறன் மிக்கதாகவும் விலை குறை வாகவும் மாறின. 1960இல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இசையின் அனுபவத்தை இன்னும் மேன்மை படுத்தின.  பின்னர் 1970களில்தான் பாஸ் (BASS EFFECT) அதிர்வெண் ஏற்படுத்தும்படியான ஒலிபெருக்கிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 

பின்னர் 1980,90களில் இதன் வளர்ச்சி அடுத்தக்கட்டத்தை அடைந்தது. இது மேலும் முன்னேறி அடுத்தடுத்த ஆண்டுகளில் டிஜிட்டல் ஆடியோ மற்றும் டிஜிட்டல் சிக்னல் ப்ராசசிங் தொழில்நுட்பம் மூலமாக மிகவும் துல்லியமாக தேவையான சத்தத்தை கண்ட்ரோல் செய்துகொள்ளும் வகையில் ஸ்பீக்கர்கள் உருவாக்கப்பட்டன. 

அன்று முதல் இன்று வரை ஸ்பீக்கர் தொழில்நுட்பத்தில் பல மாறுதல்கள் ஏற்பட்டு, தற்போது எந்த இணைப்பும் செய்யாமலேயே வயர்லெஸ் தொழில்நுட்பத்துக்கு அனைத்துமே மாறி வருவதை நாம் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. 

ஸ்பீக்கர் தொழில்நுட்பம், தொலைபேசி கண்டுபிடிக்கப் பட்ட காலத்திலிருந்து, தற்போது பயன்படுத்தப்படும் ப்ளூடூத் மற்றும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் வரை நினைத்துப் பார்க்க முடியாத அளவில் மாற்றம் பெற்றுள்ளது. சந்தையில் பல்வேறு வகையான ஸ்பீக்கர்களும், ஹெட்போன்களும் கிடைக்கின்றன. அவை ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான அம்சங்கள் மற்றும் திறன்களைக் கொண்டுள்ளன. 

நாம் எங்கெங்கே, எதற்காக, எப்படியெல்லாம் பயன்படுத்த விரும்புகிறோமோ அதற்கு ஏற்ற வகையில் போர்ட்டபிள் ஸ்பீக்கர், ஹோம் தியேட்டர் அமைப்பு, ப்ளூடூத் ஸ்பீக்கர், ப்ளூடூத் ஹெட்போன், Ear பாட்ஸ் என பல்வேறு வகைகளில்  இன்று நம்மால் வாங்க முடிகிறது என்பது மலைப்பாகத்தான் உள்ளது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com