3 கோடியே 30 லட்சம் மட்டுமே!

3 கோடியே 30 லட்சம் மட்டுமே!

வந்துவிட்டது அயன் மேன் சூட். (Iron Man Suit) இந்திய ராணுவத்திலும் இதை பயன்படுத்தப் போறாங்களாம்.

னி நாமளும் அயன் மேன் (Iron Man) மாதிரி சூட் மாட்டிக் கொண்டு வானில் வட்டமடிக்கலாம். இங்கிலாந்தைச் சேர்ந்த கிராவிட்டி இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் இந்த சூட்டை அதிநவீனமாக வடிவமைத்துள்ளது. 

தனிமனிதனே ராக்கெட் போல மாறி வானத்தில் பறப்பதையெல்லாம் அயன் மேன் திரைப்படத்தில் நாம் பார்த்திருப்போம். எப்படி இதுபோன்று சூட் மாட்டிக் கொண்டு வானில் பறக்க முடியும் என ஒரு காலத்தில் யோசித்திருப்போம். ஆனால் தற்காலத்தில் இது உண்மையாகியுள்ளது. 

'ஜெட் பேக் சூட்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த உடை, கேஸ் டர்பைன் என்ஜின்களின் உதவியோடு உருவாக்கப் பட்டுள்ளது. இதை ஒரு நபர் மாட்டிக்கொண்டு சராசரியாக 10 முதல் 12 அடிவரை தரையிலிருந்து மேலெழும்பிப் பறக்க முடியும். 

அமெரிக்காவின் மரைன் கார்ப்ஸ் மற்றும் இங்கிலாந்தின் ராயல் நேவியைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய கடற்படை செயல்பாடுகளில் இதை சோதனை செய்து வருகிறார்கள். மேலும் இந்திய ராணுவமும் இந்த சூட்களை பயன்படுத்த உள்ளது. இதற்காக 'ஃபாஸ்ட் ட்ராக்' என்ற நடைமுறை மூலம், மொத்தம் 48 ஜெட் பேக் சூட்களை வாங்கு வதற்கான கோரிக்கையை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

இந்த உடை திரைப்படத்தில் காட்டுவதை விட மிகவும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நமது உடல் பகுதியிலிருந்து ராக்கெட் போன்று காற்றை அழுத்தி கீழே தள்ளி, மனிதனை மேலே பறக்க வைக்கும் வகையில் இது செயல்படும். நாம் பறக்கும் திசையை மாற்றுவதற்கான அமைப்புகளும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்கள் அணிய வசதியாக பாரம் அதிகமாக இருக்காதபடி, எடை மிகவும் குறைவாகவே வடிவமைக்கப் பட்டுள்ளது.

விமானம் ஓட்டுவதற்கு ஒரு வருட பயிற்சியாவது அவசியமானது. ஆனால் இந்த ஜெட் பேக் சூட் பயன்படுத்துவதை ஒரு நாளிலேயே பழகிவிடலாமாம். அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த பழகினாலே, எளிதாக பறக்கப் பழகிவிடலாம் என்று அந்நிறுவன மேலதிகாரிகள் கூறுகிறார்கள். ராணுவ பயன்பாட்டிற்கு மட்டுமில்லாமல், தனிநபரும் இந்த சூட்டை வாங்கிக் கொள்ளலாம். தற்போது, ஒரு சூட்டின் விலை 3 கோடியே 30 லட்சம் என்று கூறப்படுகிறது. மேலும் தனி நபருக்கு இந்த சூட்டை பயன்படுத்துவதற்கான பயிற்சி வழங்க, இரண்டு நாட்களுக்கு சுமார் 4.12 லட்சம் கட்டணமாக வசூலிக்கிறார்கள். 

தற்போது கிராவிட்டி நிறுவனம், ராணுவத்தினர் மற்றும் வானில் பறக்க விரும்பும் நபர்களுடன், இந்த ஜெட் சூட்டை சோதித்து வருகிறது. அவ்வப்போது புதிய புதிய மாற்றங் களையும் செய்து கொண்டு வருகிறது. தற்போது எப்படி ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகிறதோ, அதேபோல எதிர்காலத்தில் இந்த ஜெட் சூட்டும், போர் மற்றும் வணிக சூழலுக்கு பயன்படுத்தப்படலாம் என்று நம்பப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com