தெலங்கானாவில் ChatGPT பயன்படுத்தி சிவில் சர்வீஸ் தேர்வெழுதிய நபர்.

தெலங்கானாவில் ChatGPT பயன்படுத்தி சிவில் சர்வீஸ் தேர்வெழுதிய நபர்.

மீபகாலமாக ChatGPT பயன்படுத்தி நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால், இதை எதற்கெல்லாம் பயன்படுத்த வேண்டும், பயன்படுத்தக் வேண்டாம் என புதிய சட்டமே போடவேண்டும்போல் தோன்றுகிறது. 

இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தினுசு தினுசாக பல குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. தற்போது இந்த தொழில்நுட்பத்தின் தாக்கமானது மிகப்பெரும் உச்சத்தை எட்டிவிட்டது. பள்ளி மாணவர்கள் அசைன்மென்ட் எழுதுவது முதல், விஞ்ஞானிகள் ஆய்வு நடத்துவது வரை ChatGPT பிரபலமடைந்துவிட்டது. 

இதில் எந்த கேள்வி கேட்டாலும் சரியான பதில் கிடைப்பதால், இதைப் பயன்படுத்தி தேர்வு எழுதும்போதும் பல முறைகேடுகள் நடக்கத் தொடங்கிவிட்டது. தெலுங்கானா மாநிலத்தில் நடக்கும் அரசுப் பணிகளுக்கு, தமிழகத்தில் நடக்கும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் போலவே 10 லட்சத்திற்கும் அதிகமானோர் தயாராகி வருகின்றனர். கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் உதவி செயல் பொறியாளர் தேர்வுகள் தெலங்கானாவில் நடத்தப்பட்டது. 

இந்த தேர்வில் பல்வேறு விதமான முறைகேடுகள் நடந்ததாக பலரும் புகார் அளித்த நிலையில், இதுகுறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டுவந்தது. இவர்களின் விசாரணையில், பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 8 பேர் முறைகேட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், அதில் ஒரு தேர்வர் ChatGPT பயன்படுத்தி தேர்வு எழுதி இருப்பதும் தெரியவந்துள்ளது. மற்ற 7 தேர்வர்களும் ப்ளூடூத் இயர்பாட்ஸ் பயன்படுத்தி பதில் எழுதியுள்ளனர். 

மேலும் பூலா ரமேஷ் என்னும் மற்றொரு தேர்வர், தெலுங்கானாவின் TSNPDCL-ல் டிவிஷனல் இன்ஜினியர் ஆக இருப்பவரின் உதவியுடன், நடந்து முடிந்த உதவி செயல் பொறியாளர் தேர்வுக்கான கேள்விகளை, தேர்வு நடப்பதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பாகவே பெற்றுள்ளார். மற்றும் அந்த கேள்விகளை மேலும் 30 தேர்வர்களுக்குப் பகிர்ந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. 

இதுமட்டுமின்றி, கேள்விக்கான பதில்களை ChatGPT-ன் உதவியோடு பெற்று, அந்த பதில்களை ப்ளூடூத் இயர்பாட்ஸ் மூலமாக 7 பேருக்கு பகிர்ந்துள்ளார். இதற்காக அந்த 7 பேரிடமிருந்தும் ரூபாய் 40 லட்சம் வரை பெற்றுள்ளார். அதேபோல கேள்விகளைக் கொடுத்த முப்பது தேர்வர்களிடமும் தலா 25 லட்சம் வரை பெற்றுள்ளார். தற்போது இந்த முறைகேட்டில் ஈடுபட்ட எட்டு பேரையும் கைது செய்துள்ளனர். 

மீதமுள்ள 30 நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடந்துவருகிறது. இந்த சம்பவத்தால் அந்தத் தேர்வே மொத்தமாக ரத்து செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப் படுகிறது. இதனால், எந்தத் தவறும் செய்யாத சிவில் சர்வீஸ் தேர்வர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com