ரூ.50 கோடி பேரமா? அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு..!

திமுகவில் இணைந்தால் அமைச்சர் பதவி; மறுத்தால் லாரி ஏற்றி கொலை மிரட்டல்" - ஆடியோ ஆதாரங்களுடன் தவெக எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு; மாறி மாறி பாயும் புகார்களால் அதிரும் தமிழக அரசியல்.
அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்Source:dinamalar
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ரூ. 50 கோடிக்கு பேரம் பேசியதாக தவெக எம்எல்ஏ குற்றம்சாட்டிய நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தவெக எம்எல்ஏ விஜி சரவணனை திமுகவில் இணைய வைக்க ரூபாய் 50 கோடி பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை, திமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தின் பின்னணி என்னவென்றால் ஸ்ரீவைகுண்டம் தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ விஜி சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு திமுகவில் இணைந்தால் ரூபாய் 50 கோடி பணம் மற்றும் அமைச்சர் பதவி தருவதாக அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் தன்னிடம் பேரம் பேசியதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இந்த பேரத்திற்கு உடன்படவில்லை என்றால் லாரி ஏற்றிக் கொன்று விடுவோம் என்று மிரட்டல் விடுத்ததாகவும் கூறி, இது தொடர்பான ஆடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களையும் விஜி சரவணன் ஊடகங்களிடம் வெளியிட்டார்.

இந்த குற்றச்சாட்டுகள் பரவிய சில மணி நேரங்களிலேயே திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் இதை முற்றிலும் மறுத்து விளக்கம் அளித்துள்ளார். அண்மையில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த நிலையில் தவெக தரப்பிலிருந்து இந்த புதிய புகார் எழுப்பப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைத்திருக்கும் நிலையில் தமிழ்நாடு அரசியல் களம் பல்வேறு திருப்பங்களுடன் அடுத்தடுத்து அரங்கேறும் நிகழ்வுகளால் பரபரப்புடன் நகர்ந்து வருகிறது. முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அப்பொழுது "அதிமுக மற்றும் பிற கட்சிகளில் இருந்து ஆட்களைப் பிடிக்கும் தவெக தன்னை ஆளுங்கட்சியில்(தவெக) இணையச் சொல்லி ரூபாய் 50 கோடி பேரம் பேசியதாகவும், அதற்கு மறுத்ததாலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும்" அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். 

தவெக எம்எல்ஏக்கள் தன்னிடம் ரூபாய் 50 கோடி பேரம் பேசியதாக திமுகவின் மூத்த தலைவர்கள் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை தவெக மற்றும் அதன் எம் எல் ஏக்கள் கடுமையாக மறுத்துள்ளனர்.

தவெகவின் எதிர் குற்றச்சாட்டு: 

இதற்கு நேர்மாறாக ஜெயங்கொண்டம் தவெக எம்எல்ஏ, "திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தரப்பினர் தன்னை அணுகி, தவெகவைச் சேர்ந்த சில எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இருக்க ரூபாய் 50 கோடி வரை பேரம் பேசியதாகவும், மிரட்டியதாகவும்" காவல்துறையில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் திமுக தரப்பு மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இப்படி மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டு அதற்கு தினம் தினம் மறுப்பும் தெரிவித்து வருவது தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

அதில் லேட்டஸ்டாக தவெக எம்எல்ஏ சரவணன் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆட்கள் தன்னை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணையுமாறு கூறி ரூபாய் 50 கோடி பேரம் பேசியதாக குற்றச்சாட்டை முன் வைத்ததும், அதற்கு திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து, தன் மீதும் தன் கட்சியினர் மீதும் வீண்பழி சுமத்தப்படுவதாகஅனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவிப்பதும் நடைபெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்:
கமல்ஹாசன் நிறுவனத்தில் ரூ.38 லட்சம் மோசடி முயற்சி: அதிர்ச்சியில் திரையுலகம்!
அனிதா ராதாகிருஷ்ணன்
logo
Kalki Online
kalkionline.com