

யாருன்னே தெரிய நபருக்கு கூட Gpayல் பணத்தை அனுப்ப வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்றால் மொபைல் நம்பரை கொடுக்க வேண்டி உள்ளது. அதாவது நாம் யாருக்காவது UPI பணம் அனுப்ப வேண்டும் என்றால் நம்முடைய செல்போன் நம்பரை சொல்ல வேண்டும். இப்படி மொபைல் நம்பரை கொடுக்கும் போது நிறைய பேர் சிலபேர் அந்த நம்பரை நோட் செய்து வைத்துக்கொண்டு போன் பண்றது, மெசேஜ் அனுப்புவது என்று மிஸ்யூஸ் செய்றாங்க. அதனால் நிறைய பிரச்சனைகளும் வருது.
அந்த மாதிரியான சம்பவங்கள் இனிமேல் நடப்பதற்கு வாய்ப்புகளே கிடையாது. அதனால் இனிமேல் நீங்க யாருக்கும் நம்பரையெல்லாம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அதாவது இனிமேல் Gpayல் யாருக்காவது பணத்தை அனுப்பவோ, வாங்கவோ செல்போன் நம்பரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
ஏன்னா இனிமேல் UPI நம்பர் மூலமாகவே பணத்தை அனுப்ப முடியும். அதற்கு பதிலாக மொபைல் நம்பரை போலவே வேறு ஒரு நம்பரை உருவாக்கி அந்த நம்பரை சொன்னாலே போதும் நீங்கள் யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவர்களுக்கு UPI மூலம் பணத்தை அனுப்ப முடியும்.
இந்த UPI நம்பர் என்பது 8ல் இருந்து 9 டிஜிட்டல் கொண்ட நம்பர். இந்த நம்பரை நீங்க google pay, phonepe என்று எதிலும் நம்பர் போடும் இடத்தில் இந்த UPI நம்பரை போட்டால் நம்மால் பணத்தை அனுப்ப முடியும். பணம் நாம் அனுப்பியவர்களுக்கு சென்று விடும். இந்த UPI நம்பரை நீங்க உபயோகிக்கும் எந்த பேமொண்ட் ஆப்பில் வேண்டுமானலும் உருவாக்க முடியும்.
உங்களுடைய போனில் phonepe appஐ கிளிக் செய்து அதில் manage payments என்ற ஆப்ஷன் வரும். அதில் view all கொடுத்தால் மற்றொரு ஸ்கிரின் தெரியும். அதில் கீழே UPI settings என்ற ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்தால் நீங்கள் எத்தனை வங்கி UPI மூலம் பணம் அனுப்புகின்றீர்களோ அந்த வங்கிகளின் விவரங்களை காட்டும்.
அதில் UPI Number என்ற ஆப்ஷன் இருக்கும். அதில் கிளிக் செய்தால் அதன் கீழே Add another UPI number என்ற ஆப்ஷன் வரும். அதில் போய் தான் நாம் நம்முடைய மொபைல் நம்பருக்கும் பதிலாக வேறு நம்பரை கொடுக்க வேண்டும். Add another UPI number ஆப்ஷனை கிளிக் செய்து உள்ளே சென்றால் UPI number rules என்று விதிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதில் உள்ள விதிமுறைகளின்படி தான் நாம் நம்பரை கொடுக்க முடியும். அதாவது நீங்கள் கொடுக்கும் நம்பர் இத்தனை டிஜிட் தான் இருக்க வேண்டும் என்றால் அத்தனை டிஜிட் நம்பர் தான் கொடுக்க வேண்டும். அதுபோல் நாம் கொடுக்கக்கூடிய நம்பர் வேறு யாராவது யூஸ் பண்றாங்க என்றால் அந்த நம்பரையும் நமக்கு கொடுக்க மாட்டார்கள்.
யூனிக்கான நம்பர் எதுவே இதை தான் நமக்கு கொடுப்பார்கள். அதனால் அதுவரை நாம் நமக்கு விருப்பமான நம்பரை அதில் பதிவிட்டு முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். கடைசியாக UPI number கிடைத்த உடன் யாராவது உங்களிடம் பணம் அனுப்ப போன் நம்பர் கேட்டால் உங்களுடைய ஒரிஜினல் போன் நம்பரை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய UPI நம்பரை கொடுத்தால் போதும். உங்கள் அக்கவுண்டுக்கு பணம் வந்து சேர்ந்து விடும்.