உலகின் வயதான நாய் பாபி உயிரிழப்பு!

DOG BOBBY
DOG BOBBY

லகின் அதிக நாட்கள் வாழ்ந்து கின்னஸ் சாதனைப் படைத்த purebred Rafeiro do Alentejo வகையை சேர்ந்த பாபி என்ற நாய் கடந்த 22ம் தேதி போர்ச்சுகல் நாட்டில் உயிரிழந்தது. அந்த நாய்க்கு 32 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

பாபியை சில நாட்களாக கண்காணித்து வந்த கால்நடை மருத்துவர் கரேன் பெக்கர் சமூக வளைத்தளங்களில் பாபியின் இறப்பை தெரிவித்திருந்தார் “பாபி அதிக நாட்கள் வாழ்ந்திருந்தாலும்,பாபியை விரும்புவோருக்கு அது வாழ்ந்தகாலம் மிக குறைந்த நாட்களே என எண்ணுவார்கள்” என உருக்கமாக பதிவுச் செய்திருந்தார்.

பாபி மே 11 ,1992 ல் போர்ச்சுகல் நாட்டில் பிறந்தது. பாபியை வளர்த்த போர்ச்சிகலை சேர்ந்த காஸ்டா என்பவர் பாபியின் எட்டு வயதில் தூக்கி வந்து வளர்க்க ஆரம்பித்தார். வீட்டில் அவர்கள் என்ன சாப்பிடுகிறார்களோ அதையேத்தான் பாபிக்கும் சாப்பிட கொடுத்தனர்.

பொதுவாகவே purebred Rafeiro do Alentejo இனத்தின் நாய்கள் 10 முதல் 14 வயது வரையே உயிர் வாழும். ஆனால் பாபி மொத்தம் 31 வருடங்கள் 165 நாட்கள் வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்தது. பாபியின் தாய் கிரா வெறும் 18 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்ந்தது. பாபியுடன் பிறந்த நாய் அதனுடைய 22 வயதில் இறந்தது.

2018ம் ஆண்டு பாபிக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. அதன்பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு நடப்பதற்கே சிரமப்பட்டது. பிறகு பார்வை மங்கத் தொடங்கி அக்டோபர் 22ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானது.

பாபியின் மறைவுக்கு ஓனர் காஸ்டா,” பாபி எங்களுடன் தான் எப்போதும் இருக்கும். இங்கு எங்கள் வீட்டிற்கும் பூங்காவிற்கும் மாறி மாறி சென்று வரும். நாங்கள் சாப்பிடும் உணவைத்தான் அதுவும் சாப்பிடும். இதுவரை நாங்கள் பாபியை கட்டி வைத்ததே இல்லை. வீட்டில் எங்கு வேண்டுமென்றாலும் சுத்திக்கொண்டு இருக்கும். நாங்கள் அவனுடன் சேர்ந்து நான்கு பூனைகளும் வளர்த்தோம். அவர்களுடன் எப்போதும் அவன் விளையாடிக்கொண்டுத்தான் இருப்பான்.” என்று உருக்கமாக பேசினார்.

இதற்கு முன்னர் வயதான நாய் என்ற பட்டம் பெற்ற Australian Cattle Dog தனது 29ம் வயதில் 1939ம் ஆண்டு காலமானது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com