வானில் பறந்த 800 பறக்கும் தட்டுக்கள்: நாசா வெளியிட்ட ஆய்வு முடிவுகள்!

வானில் பறந்த 800 பறக்கும் தட்டுக்கள்: நாசா வெளியிட்ட ஆய்வு முடிவுகள்!

வானில் கடந்த 10 ஆண்டுகளாக பறக்கும் தட்டுக்கள் என்றழைக்கப்படும் யுஎஃப்ஒ போன்ற 800 மர்மமான பொருட்கள் அடையாளம் காணப்பட்டதாக நாசா மற்றும் அமெரிக்க ராணுவம் மேற்கொண்ட ஆய்வுவில் கூறப்பட்டுள்ளது.

பொதுவாக மனிதர்களுக்கு பூமியைப் போல் வேறு ஒரு கிரகம் அண்டத்தில் உள்ளது என்றும், அங்கு மனிதர்களை போல் ஒரு உயிரினம் வாழ்ந்து வருவதாகவும் காலம் காலமாக நம்பப்படுகிறது. இந்த கருத்தை நம்ப வைக்க வானில் பறக்கும் தட்டுக்களை மக்கள் பார்த்த்த நிகழ்வுகளும் செய்திகளாக வெளிவருவதுண்டு. மேலும், வேற்று கிரகவாசிகள் பூமியை காண்காணிக்க பறக்கும் தட்டுக்கள் மூலம் அவ்வப்போது உலா வருவதாகவும் கூறுவதை கேள்விபட்டிருப்போம். இந்நிலையில், நாசா மற்றும் அமெரிக்க ராணுவத்தின் All-domain Anomaly Resolution Office (AARO) இணைந்து கடந்த ஆண்டு வானில் அடையாளம் காணப்படாத பொருட்கள் மற்றும் பறக்கும் தட்டுக்கள் எனப்படும் யுஎப்ஓ குறித்த ஆய்வை நடத்த ஒரு குழுவை உருவாக்கியது.

இந்த குழுவின் முதல் பொதுக்குழு கூட்டம் நேற்றைய தினம் (மே 31, 2023) நடைபெற்றது. அப்போது, மேற்கு அமெரிக்கா கடற்படை விமானம் எடுத்த வீடியோ ஒன்றில் இரவு வானத்தில் தொடர்ச்சியான புள்ளிகள் நகர்வதைக் காட்டியது. இதனை ஆய்வு செய்ய இராணுவ விமானத்தை அதன் அருகே கொண்டுச்செல்ல முயற்சித்தோம், ஆனால் அந்த பொருளை இடைமறிக்க முடியவில்லை. பறக்கும் தட்டுக்கள் குறித்த மர்மங்களை ஆராய்ச்சி செய்த உயர்தரமான தரவுகள் தேவைப்படுகிறது. குறிப்பாக பறக்கும் தட்டுக்கள் மற்றும் வேற்று கிரகவாசிகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகள் சமூக வலைத்தளங்களில் அவமானப்படுத்தப்படுகிறார்கள். வானில் கடந்த 10 ஆண்டுகளாக பறக்கும் தட்டுக்கள் என்றழைக்கப்படும் யுஎப்ஒ போன்ற 800 மர்மமான பொருட்கள் அடையாளம் காணப்பட்டது. ஆனால், அதில் மிக சிறிய பகுதியை மட்டும் எங்கள் புரிந்துகொள்ள முடிந்தது. வானில் கண்டறியப்படும் பறக்கும் தட்டுக்கள் போன்ற விஷயங்கள் குறித்து முழுமையான ஆராய்ச்சி செய்தால்தான் அதனுடைய உண்மைதன்மையை வெளி உலகிற்கு செல்லமுடியும். வேற்று கிரக வாசிகள் மற்றும் பறக்கும் தட்டுக்கள் என்றழைக்கப்படும் யுஎப்ஒ போன்ற மர்மங்கள் நிறைந்த விஷயங்களில் நாசா மக்களிடம் வெளிப்படையாகவே இருக்க விரும்புவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com