பேஸ்பால் விளையாட்டின்போது திடீரென ஏற்பட்ட புழுதி புயலில் சிக்கிய சிறுவன்!

பேஸ்பால் விளையாட்டின்போது திடீரென ஏற்பட்ட புழுதி புயலில் சிக்கிய சிறுவன்!

புளோரிடா மாகாணத்தில், பேஸ்பால் விளையாட்டின் போது திடீரென ஏற்பட்ட புழுதிப் புயலில் சிக்கிய சிறுவனை, சில நொடிகளில் விரைந்து செயல்பட்டு பேஸ்பால் நடுவர் காப்பாற்றியதையடுத்து, நடுவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

அமெரிக்காவில் பிரபல விளையாட்டுகளில் ஒன்றாக கருதப்படுவது பேஸ்பால். இவ்விளையாட்டை அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், ஜாக்சன்வில்லியில் உள்ள ஃபோர்ட் கரோலின் அத்லெட்டிக்ஸ் அசோசியேஷன் பேஸ்பால் மைதானத்தில் சிறுவர்கள் சிலர் பங்குகொண்டு விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீரென புழுதிப் புயல் ஏற்பட்டுள்ளது.

திடீரென ஏற்பட்ட இந்த புழுதிப் புயலில் 7 வயது சிறுவன் ஒருவன் மாட்டி திணறியுள்ளான். உடனே, அங்கிருந்த நடுவர், நிலைமையை உணர்ந்து விரைவாக செயல்பட்டு புழுதிப் புயலில் மாட்டிய சிறுவனை வேகமாக இழுத்து அவனது உயிரைக் காப்பாற்றினார்.

பின்னர், இதுகுறித்து சிறுவன் பேசும்போது, தான் மிகவும் பயந்துவிட்டதாகவும், யாராவது தன்னை வெளியே இழுத்து அதிலிருந்து காப்பாற்ற வேண்டும் என நினைத்ததாகவும், சில நொடிகள் தான் அந்த புழுதிப் புயலில் சிக்கியதாகவும் கூறியுள்ளான்.

இச்சம்பவம் வீடியோவாக பதிவான நிலையில், சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதைத் தொடர்ந்து அச்சிறுவனை காப்பாற்றிய நடுவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com