இஸ்ரேலில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ்!

இஸ்ரேலில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ்!

இஸ்ரேலில் புதிய வகை கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இஸ்ரேலில் உருமாற்றம் அடைந்த வகையான கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாறுபாடு BA.1 (Omicron) மற்றும் BA.2 வகைகளின் கலவையாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2019ம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா பரவல் உலகத்தையே ஆட்டிப் படைத்து. இந்த கொரேனா வைரஸ் உருமாற்றம் அடைந்து வேகமாக பரவி உலக நாடுகளையே முடக்கியது. கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றங்களை அடைந்து டெல்டா, ஆல்பா, டெல்டா பிளஸ் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் பரவி வருகிறது. தற்போது ஒமைக்ரான் என்ற உருமாற்றம் அடைந்து உலகம் முழுவதும் பரவி வருகிறது. கடுமையான கட்டுபாடுகள், தடுப்பூசி என தற்போது கட்டுக்குள் கொரோனா பரவல் கொண்டு வரப்பட்டுள்ளது.

ப்ளோரனா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வைரஸ் இஸ்ரேலில் ஒரு நபருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் ப்ளூவென்சா தொற்று ஆகிய 2 தொற்றுகள் சேர்ந்து ’ப்ளோரனா’ என பெயரில் புதிய தொற்று உறுதியாகியுள்ளது. பிரசவத்திற்காக வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு இந்த ப்ளோரனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுடன் இன்ப்ளுவன்சா என்ற வைரசும் இணைந்து இந்த ப்ளரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த புதிய வகை வைரஸ் காரணமாக பென்-குரியன் சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட RT- PCR சோதனையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் ஒமிக்ரான் வகை கொரோனா குறைந்து வரும் நிலையில், தற்போது BA.2 வகை வைரஸ் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த வாரம் இஸ்ரேலில் 6,310 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 335 நோயாளிகள் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும், 151 பேர் ஆக்சிஜன் உதவியுடன் தீவிர சிசிக்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com