ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை - மாஸ் காட்டிய சீனா!

ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை - மாஸ் காட்டிய சீனா!

சீனா என்றாலே மாஸ் புராடெக்ஷன்தான். எதையும் குறைவான நேரத்தில், அதிகமாக உற்பத்தி செய்யும் சீனாவில் அரசின் நடவடிக்கைகளும் அதிரடியாகவே இருந்திருக்கின்றன. அரசு அலுவலங்கள், மருத்துவமனை கட்டுவதில் தொடங்கி ஒரே வாரத்தில் பிரம்மாண்டமான கட்டிடங்களை கட்டுவதிலும் சீனா அரசு சாதனை படைத்திருக்கிறது.

இந்நிலையில் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதிலும் குறுகிய காலத்தில் பிரம்மாண்டத்தை காட்டியிருக்கிறது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ள ஊழல் புகார்களை விசாரித்து குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது.

சீனாவில் ஜின்பிங் தலைமையிலான இடது சாரி அரசு செயல்படடு வருகிறது. ஊழலுக்கு எதிரான பிரசாரம் என்பது அரசின் சார்பாக தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. என்னதான் கிடுகிடு வளர்ச்சி அடைந்தாலும், சீனாவிலும் ஊழலை ஒழிக்க முடியாத நிலைதான் இருந்து வருகிறது. ஏராளமான அதிகாரிகள் ஊழல் புகாரில் சிக்கியிருக்கிறார்கள்.

ஊழல் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் பெறப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டன. இந்த புகார்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையின் முடிவில் ஊழல் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் 1 லட்சத்து 10 ஆயிரம் அதிகாரிகள் சிக்கியிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இது குறித்து இந்தோ- பசிபிக் தொடர்பு மையம் விரிவான அறிக்கை வெளியிட்டிருக்கிறது. பொதுமக்கள் முன்வைத்துள்ள புகார்களில் மாநில அளவில் முக்கியப் பங்கு வகிக்கும் அதிகாரிகள், துணை அதிகாரிகள், ராணுவப்படையை சேர்ந்த அதிகாரிகள், கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் பல்வேறு ஊழல்களில் சிக்கியிருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இவர்கள் அனைவர் மீதும் சீன அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் 3 மாதங்களில் செய்து முடித்திருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது. சீன அரசு ஒவ்வொரு காலண்டும் ஊழல் எதிர்ப்பு அறிக்கை வெளியிட்டு வருகிறது. இதில் எத்தனை ஊழல் புகார்கள் மக்களிடமிருந்து பெறப்பட்டிருக்கின்றன என்பதும் அதில் எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாண்டில் முதல் காலாண்டுக்கான ஊழல் எதிர்ப்பு அறிக்கையில் 7 லட்சத்து 76 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இதில் 2 லட்சத்து 31 ஆயிரம் புகார்கள்

தொடர்பானது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இத்தகைய புகார்களின் மீது 1 லட்சத்து 10 ஆயிரம் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதெல்லாம் சீனாவில் மட்டுமே சாத்தியம். இந்தியா போன்ற நாடுகளில் துரித நடவடிக்கை எடுப்பதெல்லாம் இன்னொரு 50 ஆண்டுகளுக்கு சாத்தியமே இல்லை என்கிறார்கள், இணையவாசிகள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com