'அல்லாவே எங்களுக்கு மோடி வேண்டும்' பாகிஸ்தான் பிரமுகரின் குமுறல்!

'அல்லாவே எங்களுக்கு மோடி வேண்டும்' பாகிஸ்தான் பிரமுகரின் குமுறல்!

பாகிஸ்தானில் இப்போது மோசமான பொருளாதார சூழல் நிலவுகிறது. அங்கு விலைவாசிகள் உயர்ந்துவிட்டன. ஒரு லிட்டர் பால் ரூ.250-க்கு மேல் விற்கப்படுகிறது. சிக்கன் விலை ரூ.150 லிருந்து ரூ.780 ஆக உயர்ந்துவிட்டது. பாகிஸ்தான் நாடு திவாலாகிவிட்டதாக அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சரே சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த யூடியூபர் சன் அம்ஜத் என்பவர் அந்த நாட்டைச் சேர்ந்த சக பாகிஸ்தானியர் ஒருவர் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பின் மோசமான ஆட்சிக்கு எதிராக கொந்தளித்து கூக்குரலிடும் விடியோவை வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் பொருளாதார நிலைமை மிக மோசமாக போய்விட்டது. விலைவாசி கடுமையாக உயர்ந்துவிட்டது. மக்கள் அன்றாட வாழ்க்கை நடத்தவே சிரமப்படுகிறார்கள். பாகிஸ்தானிலும் நரேந்திர மோடி போல் ஒருவர் ஆட்சி நடத்தினால் நாங்களும் நியாயமான விலைக்கு பொருள்களை வாங்க முடியும் என்று கொந்தளிப்பாக பேசியுள்ளார்.

முன்னாள் பத்திரிகையாளரான சனா அம்ஜத், பாகிஸ்தானிய ஊடகங்களுடன் தொடர்பு உடையவர். அவர் உள்ளூர் மக்கள் பலரது கருத்துக்களை கேட்டு வெளியிட்டுள்ளார். அதில் ஒருவர், பாகிஸ்தானில் நிலைமை சரியில்லை. இந்தியாவுக்கு அகதியாகக்கூட ஓடிவிடலாம் போலிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரிவினை மட்டும் ஏற்பட்டிருக்காவிட்டால், நாங்களும் அத்தியாவசியப் பொருள்களை நியாயமான விலைக்கு வாங்கியிருக்க முடியும். குழந்தைகளுக்கு தினமும் உணவளித்திருக்க முடியும்.

இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்திருக்காவிட்டால், தக்காளி கிலோ ரூ. 20-க்கு கிடைக்கும், சிக்கன் கிலோ ரூ.150-க்கு வாங்க முடியும். பெட்ரோல் விலையும் லிட்டர் ரூ.100-க்கு மேல் அதிகரித்திருக்காது.

துரதிருஷ்டவசமாக எங்களுக்கு இஸ்லாமிய நாடு கிடைத்ததே தவிர, எங்களால் இஸ்லாமிய நாடு போல் வாழமுடியவில்லை என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.

எங்களுக்கு நவாஸ் ஷெரீப்போ அல்லது பெனாசீர் புட்டோவோ அல்லது இம்ரான்கானோ தேவையில்லை. ஏன் முன்னாள் ராணுவ அதிகாரி முஷாரப் போன்றவர்கள்கூட தேவையில்லை. நரேந்திர மோடி மாதிரி ஒருவர் இருந்தால் போதுமானது. நாட்டை ஆள்வதற்கு அவர்தான் சரியான நபர். நாட்டிற்கு எதிராக செயல்படுபவர்களை கையாள சரியான நபர் அவர்தான். இந்தியா இப்போது பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் இருக்கும் இடம் தெரியவில்லை என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.

மோடி ஆட்சியின் கீழ் வாழ நாங்கள் தயாராக தயாராக இருக்கிறோம். அவர் ஒன்றும் மோசமானவர் அல்ல.

எங்களுக்கு மோடி போன்ற ஒருவரை ஆட்சியாளராக தருமாறு அல்லாவை வேண்டிக் கொள்கிறேன் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

பாகிஸ்தானியர்கள் முதலில் தங்களை இந்தியாவுடன் ஒப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில்

இந்தியாவுடன் பாகிஸ்தானை ஒருநாளும் ஒப்பிடமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com