இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

அலைன் ஆஸ்பெக்ட்,  ஜான் கிளாசர் மற்றும் அண்டன் ஸிலிங்கர்
அலைன் ஆஸ்பெக்ட், ஜான் கிளாசர் மற்றும் அண்டன் ஸிலிங்கர்

2022-ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டின் அலைன் ஆஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜான் கிளாசர் மற்றும் ஆஸ்திரியாவின் அண்டன் ஸிலிங்கர் ஆகிய 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இயற்பியலுக்கான நோபல் பரிசு பிரான்ஸ், ஆஸ்திரியா, அமெரிக்கா நாடுகளை சேர்ந்த 3 பேருக்கு பகிர்ந்தளிக்க பட்டுள்ளது . குவாண்டம் தொழில்நுட்பம் பற்றிய ஆய்வுக்காக இவர்கள் 3 பேருக்கும் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கலான போட்டோன் சோதனை, பெல் ஏற்றத்தாழ்வுகளை மீறுதல், குவாண்டம் தகவல் அறிவியல் ஆகிய ஆய்வுகளுக்காக இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகிய 6 துறைகளில் சர்வதேச அளவில் அளப்பறிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இயற்பியலுக்கான நோபல் பரிசு பிரான்ஸ், ஆஸ்திரியா, அமெரிக்கா நாடுகளை சேர்ந்த 3 பேருக்கு பகிர்ந்தளிக்க பட்டுள்ளது . முன்னதாக மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com