எரிபொருள் நிரப்பிவிட்டு பணத்தை வீசி எறிந்த பென்ஸ் கார் உரிமையாளர்! கண்ணீர்விட்ட பெண் ஊழியர், கொந்தளித்த நெட்டிஸன்கள்!

எரிபொருள் நிரப்பிவிட்டு பணத்தை வீசி எறிந்த பென்ஸ் கார் உரிமையாளர்! கண்ணீர்விட்ட பெண் ஊழியர், கொந்தளித்த நெட்டிஸன்கள்!

சிலர் தங்களைத் தாங்களே பெருமைபடுத்தி தற்பெருமை பேசிக் கொள்வார்கள். மற்றவர்கள் மனம் புண்படுமே என்று கவலைப்படாமல் தங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்வார்கள்.

அப்படித்தான் சீனாவில் மெர்சிடிஸ் பென்ஸ் காரின் உரிமையாளர் ஒருவர் பெட்ரோல் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பெண் ஊழியரிடம் அவமரியாதையாக நடந்து கொண்டுள்ளார். இது தொடர்பான ஒரு விடியோ பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட அந்த விடியோவில் மெர்சிடிஸ் பென்ஸ் கார் உரிமையாளர் எரிபொருளை நிரப்பிட்டு, டிரைவர் சீட்டில் அமர்ந்தவாரே ஜன்னல் வழியாக அதற்கான பணத்தை வீசி எறிகிறார். பாவம் எரிபொருள் நிரப்பிய பெண் கண்ணீருடன் அந்த பணத்தை பொறுக்கி எடுக்கிறார்.

சுமார் 50 விநாடிகள் உள்ள அந்த விடியோவில், மெர்சிடிஸ் பென்ஸ் கார் பெட்ரோல் நிலையத்துக்கு எரிபொருள் நிரப்ப வருகிறது.

அதைத் தொடர்ந்து அங்குள்ள பெண் ஊழியர் எரிபொருள் நிரப்புகிறார். பின்னர் அதற்கான தொகையை அவர் கேட்டபோது, காரின் உரிமையாளர் உள்ளிருந்தபடியே ஜன்னல் வழியாக அதற்கான பணத்தை வீசி எறிகிறார். அந்த கார் சென்றவுடன் கீழே வீசப்பட்ட பணத்தை பொறுக்கி எடுத்த அந்த பெண், தாம் அவமதிக்கப்பட்டதாக எண்ணி மனம் நொந்து கண்ணீர் விடுகிறார்.

இந்த விடியோவை பார்த்த இணையதள பயனாளர்கள் பலரும் கார் உரிமையாளரின் செய்கையை கடுமையாக விமர்சித்துள்ளனர். சிலர், அந்த பென்ஸ் காரை இனி பெட்ரோல் நிலையத்துக்குள் எரிபொருள் நிரப்ப அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

ஒருவர், “ அந்த பெண் ஊழியர் கண்ணீர் விட்டு அழும் காட்சி மனதை உருக்குகிறது. இப்படியும் ஒருவர் இருக்கிறாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொருவர் அந்த கார் உரிமையாளரின் உண்மையான குணம் தெரிந்துவிட்டது. தங்களைவிட வசதியில் குறைந்தவர் என்பதற்காக இப்படியா நடத்துவது? என்று கேட்டுள்ளார்.

மூன்றாவது நபரோ, “ ஏன் அப்படி நடந்து கொள்கிறார்கள். இதற்கு அர்த்தமே புரியவில்லையே. மென்மையாக நடந்து கொள்வதால் என்ன நஷ்டம் ஏற்பட்டுவிடப் போகிறது” என்று கேட்டுள்ளார்.

மற்றொருவர், “ கர்மாவின் பயனைத்தான் அப்பெண் அனுபவிக்கிறார். அவருக்கு நான் ஆறுதல் சொல்ல விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே உள்ளூர் ஊடகம் ஒன்று அந்த கார் உரிமையாளர் வேண்டுமென்று பணத்தை வெளியே வீசவில்லை. அந்த சமயத்தில் ஏதாவது அவசரத்தில் அவர் இருந்திருக்கலாம் என்று கூறியுள்ளது. ஆனாலும் அந்த விளக்கம் மக்களை சமாதானப்படுத்துவதாக இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com