"கொரோனாவுக்கும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் சம்பந்தமில்லை" - சீனா!

"கொரோனாவுக்கும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் சம்பந்தமில்லை" - சீனா!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 163 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் முதல் தொடர்ந்து இரண்டு நாட்களாக 200-ஐ தாண்டி பதிவாகியிருக்கிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2371 என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

சென்ற வாரம் 228-ஆக இருந்த நிலையில் நேற்று 214-ஆக சரிந்தது. இந்நிலையில் 2-வது நாளாக இன்றும் பாதிப்பு குறைந்துள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 79 ஆயிரத்து 924 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 247 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 46 ஆயிரத்து 781 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 2,423 பேர் மருத்துவமனைகிளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொற்று பாதிப்பால் கடந்த 2 நாட்களாக தலா 2 பேர் உயரிழந்த நிலையில் நேற்று எந்த மாநிலங்களிலும் புதிதாக பலி இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5,30,720 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 2,20,14,06,483 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 10,336 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது

இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ள நிலையில், சீனா தன்னுடைய எல்லைகளை திறந்து விட்டிருக்கிறது. சீனாவில் இயல்புநிலை திரும்பி விட்டதாக சீன அரசாங்கத்தால் நடத்தப்பட்டு வரும் ‘குளோபல் டைம்ஸ்’ நாளேடு அறிவித்திருக்கிறது.

சர்வதேச போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிப்பதாக சீனா, சென்ற மாதமே அறிவித்தது. அதன் படி நேற்று முதல் ஜீரோ-கோவிட் கட்டுபாடு விதிகளைத் திரும்பப் பெற்றிருக்கிறது. இதைத் தொடர்ந்து சீனாவின் எல்லைகள் திறக்கப்படுகின்றன.

கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஜீரோ-கோவிட் கட்டுப்பாட்டு முறையை சீனா அறிவித்திருந்தது. மூன்று ஆண்டுகளாக திட்டம் நடைமுறையில் இருந்தது. இந்நிலையில் மாற்றுத் திட்டம் எதையும் அறிவிக்காமல், திடீரென திரும்பப் பெறுவது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்பது தெரியவில்லை.

2022ஆம் ஆண்டு எங்களுக்கு மிகவும் மோசமான ஓர் ஆண்டாக இருந்தது. 2023ஆம் ஆண்டு அதைவிட மோசமாக அமைந்துவிடக் கூடாது என்கிறார்கள் சீனர்கள். கொரோனா பரவல் தொடர்ந்து அபாயக்கட்டத்தில் இருந்தாலும் சீனாவில் புத்தாண்டு கொண்டாடங்களுக்கு குறைவில்லை. அது வேறு, இது வேறு என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com