ChatGPT-ஐ தடை செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த முதல் நாடு எது தெரியுமா?

ChatGPT-ஐ தடை செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த முதல் நாடு எது தெரியுமா?

இத்தாலி நாட்டின் தனிநபர் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு வெள்ளிக்கிழமை ChatGPT-ஐ பிளாக் செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஒட்டு மொத்த இணைய உலகையும் புரட்டிப்போட்ட ChatGPT-க்கு முதல் முட்டுக்கட்டையாக இத்தாலி அரசு அதிரடி காட்டியுள்ளது . அந்நாட்டில் இதை பயன்படுத்த தடை விதிக்கும் வகையில் மொத்தமாக முடக்கியுள்ளது.

இத்தாலி வாட்ச்டாக் அமைப்பு OpenAI நிறுவனத்திற்கு 20 நாள் காலஅவகாசம் கொடுத்துள்ளது. இக்காலக்கட்டத்தில் முறையான விளக்கம், மாற்றங்கள் செய்தால் கட்டாயம் அனுமதிக்க வாய்ப்பு உள்ளது. இல்லையெனில் ChatGPT மீதான தடை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக இத்தாலி கூறுவது ChatGPT அதன் பயனர் தரவுகளை மதிப்பது கிடையாது, இதேபோல் பயனர் வயதை சரி பார்ப்பது இல்லை என்பதை காரணம் காட்டி முடங்கியுள்ளது.

உலகமே இணைய உலக எதிர்காலமே ChatGPT தான் என நம்பும் வேளையில் இந்த செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பல நிறுவனங்கள், பல சேவைகளை உருவாக்கி வருகிறது.

OPENAI நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த GPT-4 இதுவரையில் உலக நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட செயற்கை நுண்ணறிவு தளத்திலேயே மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாக உள்ளது. இது மனிதர்களின் வாழ்க்கையை அச்சுறுத்தும் அளவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருத்து நிலவி வருகிறது.

இந்த நிலையில் தான் இத்தாலி வாட்ச்டாக் அமைப்பு ChatGPT தளத்தை அந்நாட்டில் முடக்குவதாக அறிவித்துள்ளது. உலகில் முதல் நாடாக ChatGPT தளத்தை இத்தாலி முடக்கியுள்ளது.

இத்தாலி அரசு இந்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்துகிறது. இதனால் இத்தாலி மக்கள் ChatGPT சேவையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com