பில் கேட்ஸின் புதிய காதலி யார் தெரியுமா?

பில் கேட்ஸின் புதிய காதலி யார் தெரியுமா?

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் பில்கேட்ஸ். பிரபலமான மைக்ரோசாஃப்ட் சாஃப்ட்வேர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் ஒருவர். சமூக விஷயங்களில் அதிக ஆர்வம் கொண்டவர். இதற்காக கேட்ஸ் அறக்கட்டளையை நிறுவி சமூக சேவைகளைச் செய்து வருகிறார்.

மெலிண்டா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்திய பில் கேட்ஸுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 30 ஆண்டுகால மணவாழ்க்கைக்குப் பின் கடந்த 2021 ஆம் ஆண்டு மெலின்டாவை பில்கேட்ஸ் விவாகரத்து செய்தார். இருவரும் பிரிந்தாலும் கேட்ஸ் அறக்கட்டளையை சேர்ந்து நடத்த ஒப்புக் கொண்டனர்.

பின்னர் ஒருநாள் பில்கேட்ஸ், “நான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள மாட்டேன். மீண்டும் மெலின்டாவை திருமணம் செய்ய விரும்புகிறேன். ஆனால், அவர் என்னை திருமணம் செய்துகொள்வரா என்பது தெரியவில்லை” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் பில்கேட்ஸுக்கு பவுலா ஹர்டு என்ற பெண்ணுடன் தொடர்பு இருப்பது இப்போது தெரியவந்துள்ளது. பவுலா திருமணமானவர். இவரது கணவர் மார்க் ஹர்டு ஆரக்கிள் நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தவர். 2019 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். 67 வயதான பில்கேட்ஸுக்கும் பவுலா ஹர்டுக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த ஓராண்டாகவே சந்தித்து பேசி வருகின்றனர்.

கடந்த மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியை இருவரும் அருகருகே அமர்ந்து ரசித்துள்ளனர். பில்கேட்ஸ் மற்றும் பவுலா இடையே காதல் ஏற்பட்டுள்ளது. அவர்களை இனி பிரிக்க முடியாது என்கிறார் அவர்கள் இருவருக்கும் நெருக்கமான நண்பர் ஒருவர். வெளி உலகிற்கு வேண்டுமானால் கேட்ஸ், பவுலாவை காதலிப்பது புதிய தகவலாக இருக்கலாம். அவருக்கு நெருங்கியவர்களுக்கு இது ஒன்றும் புதிது அல்ல என்கிறார் அந்த நண்பர்.

பவுலா ஹர்டு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து திட்டமிட்டு நடத்துவதில் வல்லவர் மட்டுமல்ல, பெரும் நன்கொடையாளர். தொழில்நுட்ப நிர்வாகியாகவும் அவர் பணியாற்றி இருக்கிறார்.

பவுலாவும் பில் கேட்ஸும் டென்னிஸ் ஆர்வலர்கள். மார்க் ஹர்டு இருக்கும்போதே அவர்கள் இருவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த மாதம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் இறுதிப் போட்டியை மெல்போர்ன் நகரில் பவுலாவும், கேட்ஸும் ஒன்றாக அமர்ந்து ரசித்துள்ளனர். இருவரும் ஒன்றாகவே சேர்ந்து சென்றபோதிலும் அந்த பெண் யார் என்பது பலருக்கும் தெரியாமல் இருந்தது. பவுலாவுக்கு மறைந்த கணவர் மார்க் ஹர்டு மூலம் காத்ரின், கெல்லி என இரண்டு மகள்கள் உள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com