ஈபே ஈ-காமர்ஸ் நிறுவனம் மேக்ரோ எக்னாமிக் பிரச்சனை!ரெசிஷன் அச்சத்தில் ஊழியர்கள்!
உலகின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான ஈபே உலகளவிலான தனது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 4 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக இந்நிறுவனத்தின் சிஇஓ அறிவித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள டெக்னாலஜி நிறுவனங்கள் அடுத்தடுத்துப் பணிநீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது வாடிக்கையாகி வருகிறது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஈபே ஈகாமர்ஸ் நிறுவனம் மேக்ரோ எக்னாமிக் பிரச்சனை காரணம் காட்டி 500 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. ஈபே ஈகாமர்ஸ் நிறுவனம் தற்போது 500 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதன் மூலம் முக்கியமான இடத்தில் முதலீடு செய்யும் வாய்ப்புகள் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஈபே நிறுவனத்தின் சிஇஓ-வான ஜேமி ஐனோன் அமெரிக்கப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பிற்குச் சமர்ப்பித்த அறிக்கையில் மேக்ரோ எக்னாமிக் கண்டிஷன் காரணமாக நிறுவனத்தில் இருந்து 500 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில் ஜேமி ஐனோன் நிறுவனத்தை வலிமையாக்கவும், வாடிக்கையாளர்களுக்கான சேவையை மேம்பட்ட முறையில் அளிக்க வேண்டும் என்பதற்காக முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

இந்த பணி நீக்க நடவடிக்கைளையால் முக்கியமாகப் புதிய தொழில்நுட்பம் , வாடிக்கையாளர் சேவை, முக்கிய வர்த்தகச் சந்தை விரிவாக்கம் ஆகியவற்றில் முதலீடு செய்து ஒட்டுமொத்த மேக்ரோ, ஈகாமர்ஸ், தொழில்நுட்ப துறையில் ஏற்படப்போகும் மாற்றத்தை ஈடு செய்ய முடியும் என ஈபே ஈகாமர்ஸ் நிறுவனம் நம்புகிறது. இந்த அறிவிப்பு வெளியானது மூலம் ஈபே பங்குகள் சுமார் 1 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
ரெசிஷன் அச்சம் காரணமாகக் கடந்த சில மாதங்களாக டெக்னாலஜி நிறுவனங்கள் அடுத்தடுத்துப் பணி நீக்க நடவடிக்கைகளை செய்து வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் அமெரிக்க மத்திய வங்கியின் தொடர் வட்டி விகித உயர்வு தான் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.