டிவிட்டரில் எலான் மஸ்க் மீண்டும் அதிரடி!

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமான டிவிட்டரில் மீண்டும் 200 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிவிட்டரை எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து அதிரடி செய்திகள் வராத நாட்களே இல்லை எனலாம். டிவிட்டரும் அதன் சர்ச்சைகளும் என தினமும் அதனை பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. டிவிட்டரில் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு வாங்கி இருக்கிறார். டிவிட்டரில் எலான் மஸ்க் எந்த ஒரு முடிவை எடுக்கவும் தயங்குவது இல்லை, 7500 ஊழியர்கள் பணியாற்றும் டிவிட்டர் நிறுவனத்தில் தற்போது வெறும் 2000 பேர் பணியாற்றி வரும் நிலையில் தற்போது 200 பேரை பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

எலான் மஸ்க் நிர்வாகம் இந்த 200 ஊழியர்கள் பணிநீக்கத்தை சனிக்கிழமை இரவு மேற்கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களும் பணிநீக்கம் குறித்து தெரிந்துக்கொண்டது மட்டும் அல்லாமல் நிறுவனம் தொடர்பான அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டு உள்ளதையும் தெரிந்துக்கொண்டனர்.பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் SLACK, மெயில் ஐடி ஆகியவை முடக்கப்பட்டதாகவும், சக ஊழியர்களிடம் பேசுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளதாக இந்த பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்ட 5 ஊழியர்கள் தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

இந்த பணிநீக்கத்தில் டிவிட்டர் நிறுவனத்தில் மெஷின் லேர்னிங், சைட் ரிலையபிளிட்டி போன்ற முக்கியமான பிரிவில் பணியாற்றிய ப்ராஜெக்ட் மேனேஜர்ஸ், டேட்டா சையின்டிஸ்ட், இன்ஜினியர்ஸ் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதேபோல் டிவிட்டர் நிறுவனத்தின் வருமானம் ஈட்டித்தரும் பிரிவில் 30க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வரும் வேளையில் தற்போது வெறும் 8 பேர் ஆக குறைக்கப்பட்டு உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com