தன் ஊழியர்களை அசிங்கப்படுத்திய ஏலான் மஸ்க்.

தன் ஊழியர்களை அசிங்கப்படுத்திய ஏலான் மஸ்க்.

லக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் மனதில் பட்டதை அப்படியே வெளிப்படையாகப் பேசிவிடுவார். இவரது கருத்துக்கள் பல சமயங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு முன்பாகக் கூட அதில் பல்வேறு சர்ச்சை கருத்துக்களைப் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவருடைய பதிவுகளை ட்விட்டர் நிறுவனம் நீக்கியதால், "ட்விட்டரில் கருத்து சுதந்திரம் இல்லை. ஒருவேளை அந்த நிறுவனம் எனக்கு சொந்தமாக இருந்தால் முழு சுதந்திரம் கொடுப்பேன்" என விமர்சித்திருந்தார். 

அவர் சொன்னது போலவே சில மாதங்களில் அந்த நிறுவனத்தையே முழுமையாக வாங்கிவிட்டார். இனி அவர் போடும் பதிவுகளை யாராலும் தடுக்கவோ நீக்கவோ முடியாது. இப்படி தனது கருத்துக்களை முழுமையாக நம்பும் எலான் மஸ்க், வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களை அவமானப்படுத்தும் விதமாக சில வார்த்தைகளை விட்டுள்ளார். இது Work From Home ஊழியர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சமீபத்தில் ஒரு செய்தி நிறுவனத்திற்கு எலான் மாஸ்க் பேட்டியளித்த போது அவரிடம் வீட்டிலிருந்து பணிபுரிபவர்கள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் சற்றும் சிந்திக்காமல், "ஒர்க் ப்ரம் ஹோம் நடைமுறை தவறான ஒன்றாகும். அது ஒரு Bulls***" என சர்ச்சைக்குரிய வார்த்தையைப் பயன்படுத்தி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், நீங்கள் வீட்டிலிருந்து வேலை செய்கிறீர்கள் என்றால், உங்கள் காரைத் தயாரித்த ஊழியர்கள், உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் ஏன் வீட்டிலிருந்து வேலை செய்ய முடியவில்லை? என சிந்தியுங்கள். 

வாகன ஓட்டுனர்கள், சுகாதாரப் பணியாளர்கள் போலவே ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனமும் சேவை சார்ந்த பணிகளை செய்து வருகிறது. எனவே அனைவரும் அலுவலகம் வந்து பணிபுரிய வேண்டும். பிரெஞ்சு புரட்சியின்போது அந்நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வந்தனர். மக்கள் சாப்பிட ஒரு துண்டு ரொட்டி கூடக் கிடைக்கவில்லை. அந்த சமயத்தில் ராணியாக இருந்த மேரி அன்டோனெட் "மக்களுக்கு சாப்பிட ரொட்டி இல்லை என்றால், கேக் சாப்பிடட்டும்" என சொன்னார். ஆனால் ரொட்டியை விட கேக் விலை உயர்ந்தது என்று அவருக்குத் தெரியவில்லை. அதேபோல்தான் வீட்டிலிருந்து பணிபுரியும் நபர்களுக்கு, அலுவலகத்திலிருந்து பணிபுரிபவரின் நிலை தெரிவதில்லை. 

எனவே, என்னைப் பொருத்தவரை வொர்க் ஃப்ரம் ஹோம் நடைமுறையானது முற்றிலும் தவறானதாகும் என எலான் மஸ்க் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com