லியோனல் மெஸ்ஸி
லியோனல் மெஸ்ஸி

உலகக் கோப்பை போட்டியுடன் விடைபெறுகிறேன்; லியோனல் மெஸ்ஸி!

வளைகுடா நாடான கத்தாரில் அடுத்த மாதம் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா துவங்கவுள்ள நிலையில், அந்த போட்டியுடன் கால்பந்து விளையாட்டிலிருந்து விலகுவதாக பிரபல வீரர் லியோனல் மெஸ்ஸி.அறிவித்துள்ளார்.

 உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளில் சர்வதேச அளவில் பிரபலமான வீரர் அர்ஜென்டினாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி.

உலகின் மிகச் சிறந்த கால்பந்து வீரர்களில் மெஸ்ஸிக்கு தனி இடம் உண்டு. கடந்த 2006-ம் ஆண்டு, உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினாவுக்காக அறிமுகமானார். இந்நிலையில், இந்த ஆண்டு கத்தார் நாட்டில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து தொடரே தனது கடைசி கால்பந்து போட்டி என மெஸ்சி அறிவித்துள்ளார்.

 -இதுகுறித்து லியோனல் மெஸ்சி தெரிவித்ததாவது:

 கத்தார் நாட்டில் நடைபெறும் உலக கோப்பை போட்டியுடன் காலபந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளேன். அந்த வகையில் அடுத்த மாதம் நடக்கப் போகும் உலகக் கோப்பை போட்டியை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். என் இந்த கடைசிப் போட்டியில் அர்ஜென்டினாவுக்கு கோப்பை வெல்வதே என் லட்சியம்.

-இவ்வாறு அவர் தெரிவித்தார். மெஸ்ஸியின் இந்த ஓய்வு அறிவிப்பு, அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com