
“ரஷ்யாவில் வசிக்கும் அமெரிக்கர்கள், அமெரிக்க சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேறுங்கள்” என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ட்வீட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவில் உளவு பார்த்ததற்காக கூறி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற அமெரிக்க பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டார்.
ரஷ்யா உக்ரைன் போர் துவங்கிய பிறகு அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே பெரும் கருத்து வேறுபாடுகள் இருந்து வருவதும் அனைவரும் அறிந்ததே.
இது தொடர்பாக ராணுவ அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள செய்தியில், “ரஷ்யாவில் வசிக்கும் அமெரிக்கர்கள், அமெரிக்க சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேறுங்கள்” என கேட்டுக் கொண்டுள்ளார்.
உளவு பார்த்ததற்காக கைது செய்யப்பட்ட 31 வயதான அமெரிக்க செய்தியாளர் கெர்ஷ்கோவிச், மாஸ்கோவில் உள்ள தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலில், AFP பணியாற்றினார். அவர் கைது செய்யப்பட்டிருப்பது அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பதற்றத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையே போர் தொடங்கி ஏறத்தாழ ஒரு வருடம் ஆகியும் இன்னும் போர் முடிவதாக தெரியவில்லை.பொருளாதார ரீதியாகவும் உக்ரைன் மிகப் பெரும் இழப்பைச் சந்தித்து இருக்கிறது. ரஷ்ய பொருளாதாரமும் முடங்கி இருக்கிறது. ஒட்டுமொத்த அளவில் இந்தப் போர் ரஷ்யா மற்றும் உக்ரைனிலும், உலக அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.சர்வதேச அளவில் உணவுப் பொருள்களின் விலைவாசி அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் பணவீக்கத்துக்கும் இது காரணமாக அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது ரஷ்யாவிற்கும் பல்வேறு உலக நாடுகளுக்கும் தினம் ஒரு பிரச்சனைகளாக இருந்து வருவதும் வாடிக்கையாகி விட்டது. .