அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டி! இலங்கையின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனா அறிவிப்பு!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டி! இலங்கையின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனா அறிவிப்பு!

இலங்கையின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனா அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில், இலங்கை சுதந்திர கட்சியின் சார்பாக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய சிறிசேனா, தான் எந்த சதிக்கும் அஞ்சி பின்வாங்குவதாய் இல்லை என்றும், சட்டத்தையும் நீதிமன்றத்தையும் மதிப்பதாகவும் தெரிவித்தார். எத்தகைய பிரச்னைகள் நேர்ந்தாலும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் இலங்கை சுதந்திர கட்சியின் சார்பாக போட்டியிட உள்ளதாகவும் அறிவித்தார். அடுத்த ஆண்டு செப்டம்பரில் இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. 2019 ஆம் ஆண்டில் தனது ஆட்சியின் போது நிகழ்ந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோரினார்.

இலங்கை தலைநகர் கொழும்பில், கடந்த 2019 ஆண்டு தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனா, இலங்கை ரூபாய் மதிப்பில் 10 கோடி ரூபாயை இழப்பீடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குமாறு அந்நாட்டின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் முன்னாள் அதிபர் மைத்திரி பால சிறிசேனா பல்வேறு போராட்டங்களுக்கு குரல் கொடுத்துள்ளார்.இவர் நெல்லுக்கு உரிய விலை வழங்க வலியுறுத்தி விவசாய அமைப்புகள் சார்பில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். கோதுமைக்கு அடிப்படை ஆதார விலையை நிர்ணயிப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொலன்னறுவை பகுதியில் விவசாய அமைப்புகள் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு நேரில் ஆதரவு தெரிவித்த சிறிசேனா, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு முழக்கமிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com