அலிபாபா நிறுவனர் ஜாக் மா ஜப்பானில் தஞ்சம்!

ஜாக் மா
ஜாக் மா

சீனாவில் அந்நாட்டு அரசை கடுமையாக விமர்சித்த ‘அலிபாபா’ நிறுவனர் ஜாக் மா, ஜப்பானில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவின் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ‘அலிபாபா’ நிறுவனர் ஜாக் மா, தன் நிறுவனத்தின் மீது அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது குறித்து கடுமையாக விமரிசித்தார்.

கடந்த 2020-ம் ஆண்டு ஷாங்காய் நகரில் நடந்த ஒரு வர்த்தக மாநாட்டில் சீன அரசை கடுமையாக விமர்சனம் செய்த ஜாக் மா, அதன்பின்  திடீரென மாயமானார்.

அதையடுத்து சீன அரசு அவரை கைது செய்து வீட்டுக்காவலில் வைக்கப் பட்டதாக செய்திகள் பரவின. ஆனால், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சீனாவில் 100 ஆசிரியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக நடந்த ஒரு சந்திப்பில் ஜாக் மா தோன்றி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதே சமயம் அவர் எங்கு இருக்கிறார் என்பது தொடர்ந்து மர்மமாகவே இருந்தது.

இந்த நிலையில் ஜாக் மா ஜப்பானில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும், அங்கு அவர் தனது குடும்பத்துடன் வசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜாக் மாவுக்கு நெருக்கமானவர்கள் வழங்கிய தகவல்களை மேற்கோள்காட்டி பிரபல ஜப்பான் செய்தி நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. ஜாக் மா ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் தங்கியிருப்பதாகவும், அவர் அடிக்கடி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு சென்றுவருவதாகவும் அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com