இன்று ரக்ஷா பந்தன்: நாடெங்கும் கொண்டாட்டம்!

இன்று ரக்ஷா பந்தன்: நாடெங்கும் கொண்டாட்டம்!

ஒவ்வொரு ஆவணி மாதம் பெளர்ணமி தினத்தில் கொண்டாடப்படும் பண்டிகை தான் ரக்ஷா பந்தன். அந்த வகையில் இன்று நாடெங்கும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது.

இந்த தினத்தில் சகோதரிகள் தான் சகோதரன் என கருதுவோருக்கு, அவரின் மணிக்கட்டில் ராக்கி எனும் ஒரு மஞ்சள் நூல் கட்டுவது இந்த பண்டிகையின் சிறப்பாக மற்றும் முக்கிய நிகழ்வாகும்.

அந்த பெண்ணை சகோதரியாக ஏற்று, அவள் வாழ்வின் இன்ப துன்பங்களில் அந்த ஆண் சகோதரனாக துணை நிற்பதாக ஐதீகம்.

வட மாநிலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன், இன்று தமிழகத்திலும் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் கோலாகலமாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com