ஆப்கன் மசூதி குண்டுவெடிப்பு; தலைமை இமாம் உட்பட பலர் பலி! 

ஆப்கன் மசூதி குண்டுவெடிப்பு; தலைமை இமாம் உட்பட பலர் பலி! 

தாலிபான் ஆட்சி நடந்து வரும் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள்  ஆட்சி நடந்து வரும்நிலையில் தலைநகர் காபூலில் உள்ள பிரபல மசூதியில் வெடிகுண்டு வெடித்ததில் தலைமை இமாம் உட்பட 30 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் பழமைவாதிகளான தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்தனர்.இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பிரபல மசூதி ஒன்றில் நேற்று மாலை தொழுகைக்காக ஏராளமான மக்கள் வந்தனர்.

அப்போது மசூதிக்குள் பெரும் சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்துள்ளது. இதில் தலைமை இமாம் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு ஆப்கானில் இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்பதாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. 

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com