கென்யா அதிபரானார் வில்லியம் ரூட்டோ!

கென்யா அதிபரானார் வில்லியம் ரூட்டோ!

கென்யாவில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்க நிராகரிக்கப்பட்டதால், அந்நாட்டு அதிபராக வில்லியம் ரூட்டோ இன்று பொறுப்பேற்று கொண்டார்.

ஆப்பிரிக்காவில் உள்ள குடியரசு நாடான கென்யாவில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி அதிபர் பதவிக்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சி வேட்பாளர் ரெய்லா ஒடிங்காவை விட 50.5 சதவீத வாக்கு வித்தியாசத்தில் வில்லியம் ரூட்டோ வெற்றி பெற்றார்.

இதனிடையே,அவரது வெற்றி செல்லாது என கோரி, அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், அந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் கடந்த வாரம் நிராகரித்தது.

இதையடுத்து, கென்யாவின் துணை அதிபராக இருந்த வில்லியம் ரூட்டோ இன்று அதிபராக  பதவியேற்று கொண்டார். இதன் மூலம் கென்யாவின்  5-வது அதிபராக வில்லியம் ரூட்டோ விளங்குகிறார்.

இன்று நடந்த பதவியேற்பு விழாவில் முன்னாள் அதிபர் உஹுரு கென்யாட்டாவும் புதிய அதிபரான வில்லியம் ரூட்டோவும் கைகுலுக்கி பேசிக் கொண்டது அந்நாட்டில் வரவேற்கப் பட்டது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com