மிஸ் வேர்ல்ட் தெரியும். அதென்ன மிஸஸ் வேர்ல்ட் ?

மிஸ் வேர்ல்ட் தெரியும். அதென்ன மிஸஸ் வேர்ல்ட் ?

திருமணமான பெண்களுக்கான அழகிப் போட்டி என்பது 1984ஆம் ஆண்டு முதல் நடைபெறத் தொடங்கியது.

திருமணமான பெண்களும் கிளாமர் உலகில் வாய்ப்பு பெற வேண்டும், ஒருவேளை இது அதற்காகத் தொடங்கப்பட்டிருக்கலாம் என்று அதிதி கோவித்ரிகர் கூறுகிறார். இவர் முன்னாள் உலக அழகி.

இந்தப் போட்டியில் இதுவரை அமெரிக்கா, இலங்கை, பெரு, ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் எட்டு முறை வெற்றி பெற்றுள்ளனர்.

இது தவிர, அயர்லாந்து, வியட்நாம், ஹாங்காங் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் தலா ஒரு முறை இந்தப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு இந்த பட்டத்தைப் பெற்றிருப்பவர் ஓர் இந்தியர் உலக அழகியாக  ஜம்மு மாநில  சர்கம் கௌஷல் வெற்றி பெற்றிருக்கிறார்.

அமெரிக்காவில் லாஸ் வேகஸில் நடைபெற்ற 2021-2022ஆம் ஆண்டுக்கான திருமதி உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் சர்கம் கெளஷல் 'திருமதி உலக அழகி' ஆக முடிசூட்டப்பட்டார்.

"இந்தியாவில் இருந்து போட்டியிடுபவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக்குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன். அப்போது, சர்கம் குறிப்பிடத்தக்க சிறப்பு திறன் பெற்றவராக இருந்தார் என்று நான் சொன்னேன். இந்த முறை நிச்சயமாக திருமதி உலக அழகி பட்டத்தை வெல்வோம் என்று சொன்னேன்," என்கிறார் முன்னாள் திருமதி உலக அழகி பட்டத்தை இதற்கு முன்பு வென்ற அதிதி கோவித்ரிகர்.

 சர்கம் கெளஷல் ஜம்முவை பூர்விகமாக கொண்டவர். இப்போது மும்பையில் வசிக்கிறார். அவருடைய தந்தை ஜி.எஸ். கெளஷல் ஜம்முவை சேர்ந்தவர். "என்னுடைய மகள் என் கனவை நிறைவேற்றி விட்டார். மூன்றாவது சுற்றில் அவர் தேர்வானபோது, என் இதயத்துடிப்பு உற்சாகத்தில் அதிகரித்தது. இப்போது கடவுளிடம் இருந்து எனக்கு வேறு எதுவும் கோரிக்கைகள் இல்லை," என்கிறார் அவர் . சர்கம் கெளஷல் கணவர், இந்திய கப்பற்படை அதிகாரியாக உள்ளார்.

 “திருமணமான பெண்ணுக்கு கிளாமர் உலகத்துக்கான பாதை அடைக்கப்பட்டுவிட்டது” என்ற நிலையை மாற்றி  திருமணமாகி ஒரு பெண் நடிப்பு அல்லது மாடலிங் துறையில் நுழைந்து தன் அர்ப்பணிபான உழைப்பால்  இப்படிப்பட்ட உயரங்களைத் தொடமுடியும் என்கிறார் அதிதி கோவித்ரிகர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com