தொழிற்கருவிகளைக் கொண்டு இசைக்கப்பட்ட தேசிய கீதம்!

தொழிற்கருவிகளைக் கொண்டு இசைக்கப்பட்ட தேசிய கீதம்!

ஐக்கிய அரபு நாட்டின் தேசிய தேசிய கீதம்  தொழிற்சாலையில் உள்ள கருவிகளைக் கொண்டு இசைக்கப்பட்ட புதுமை பாடல்  

உலகிலேயே முதன்முறையாகத் தொழிற்சாலையில் இருக்கும் கருவிகளை மட்டுமே கொண்டு இசையமைத்த பெருமை ஐக்கிய அரபு அமீரக தேசிய கீதத்தைச் சேரும். 

ஒரு நாட்டின் தேசிய கீதம் என்பது அந்த நாட்டின் குடிமகன்களின் உணர்வில், உயிரில் கலந்தது. அதை பாடும்போதும் இசைக்கும்போதும் தேசப் பற்று உணர்ச்சி பிரவாகம் எடுக்கும். ஐக்கிய அரபு அமீரகத்தின் (துபாய்)  தேசிய தினத்தை முன்னிட்டு அந்நாட்டின் தேசிய கீதம்  வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ளது.  

பொதுவாக எந்தவொரு பாடலும் குழு அல்லது தனி நபர்களின் இசையும்  இசைக் கருவிகளையும் கொண்டுதான் இசைக்கப்படும். ஆனால் உலகிலேயே முதன்முறையாகத் தொழிற்சாலைக் கருவிகளைக் கொண்டே ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய கீதம், அதன் தேசிய தினமான டிசம்பர் 2 நாளை முன்னிட்டு உருவாக்கப்பட்டது.  துபாயில் உள்ள ஒரு தொழிற்சாலையுடன் இணைந்து இது உருவாக்கப்பட்டிருக்கிறது.  

தொழிற்சாலையில் பயன்படுத்தும் அரவை இயந்திரம், துளையிடும் இயந்திரம், சுத்தியல் போன்ற கருவிகளைக் கொண்டு இசையெழுப்பினர். இந்நிகழ்வில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹானாவும் டேக் கேர் இண்டர்நேஷ்னல் பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் முகமது இப்ராஹிமும் தொழிலாளர்களுடன் இணைந்து தொழிற்சாலைக் கருவிகளை கொண்டு தேசிய கீதத்தை வாசித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வரலாற்றில் இந்த நிகழ்வு நடந்து முடிந்தபோது அனைவரும் மரியாதையுடன் எழுந்து நின்று, நெகிழ்சியுடனும் மகிழ்ச்சியுடனும் கரவொலி எழுப்பிப் பாராட்டுகளையும் வரவேற்பினையும் தெரிவித்தது இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினத்தை முன்னிட்டு யூடியூப்பில் வெளியாகவுள்ள தேசிய கீதப் பாடலை ஜகான்ஷெப் முஹால் இசையமைத்து உருவாக்கியுள்ளார். இதனை அந்நாட்டு மக்கள் ஆவலடுன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com