தண்ணீர் குடிச்சா ..பாத்ரூம் போனா...சம்பளம் கட்! சீனாவில் அதிரடி நிறுவனம்!

தண்ணீர் குடிச்சா ..பாத்ரூம் போனா...சம்பளம் கட்!  சீனாவில் அதிரடி நிறுவனம்!

சீனாவில் உலகின் மிகப்பெரிய பாக்ஸ்கான் தொழிற்சாலை உள்ளது . ஆப்பிள் நிறுவனத்தின் ப்ராடெக்ட்ஸ்கள் பெரும்பாலானவை பாக்ஸ்கான் தொழிற்சாலையில் தான் தயாரிக்கப்படுகிறது. ஆப்பிள் அமெரிக்க நிறுவனமாக இருந்தாலும், நீண்ட காலமாகத் தனது பெரும்பாலான உற்பத்தியைச் சீனாவில் தான் செய்து வருகிறது.

இந்த நிலையில் ரெஸ்ட் அப் தி வேர்ல்ட் என்ற லாபம் நோக்கமற்ற செய்தி தளம் சீனாவின் பாக்ஸ்கான் தொழிற்சாலையில் 3 மாதம் ஆய்வு செய்து, அது தனது ஊழியர்களை நடத்தும் விதம் குறித்து நீண்ட கட்டுரையை வெளியிட்டு உள்ளது.

இதில் ஒவ்வொரு ஊழியருக்குக்கும் எவ்வளவு வேலை கொடுக்கப்படுகிறது, எப்படித் தொடர்ந்து ஊழியர்களை வேலை வாங்குகிறது நிர்வாகம், எந்தக் காரணத்திற்காக எல்லாம் சம்பளம் குறைக்கப்படுகிறது என ஊழியர்கள் சார்ந்த கொடுமைகளை மையமாக வைத்து இந்த ஆய்வை மேற்கொண்டு உள்ளது.

அந்த ஆய்வில் தண்ணீர் குடிக்கக் கூடுதலாகச் சில நிமிடங்கள் எடுத்துக்கொண்டால் கூட சம்பளத்தைக் குறைக்கும் வழக்கம் கொண்டு உள்ளது பாக்ஸ்கான் தொழிற்சாலையில் நடை முறையில் உள்ளது.

|

அதில் ஒரு வேலையாக ஐபோனின் பின் பக்க கவரை QR கோடு வாயிலாக ஸ்கேன் செய்து பேட்டரியை சார்ஜ் செய்யும் கேபிளில் இருக்கும் டேப்-ஐ பிரித்து ஒட்டி இரண்டு ஸ்க்ரூ மூலம் இணைக்க வேண்டும். தினமும் 10 மணிநேர ஷிப்ட், ஒரு நிமிடத்திற்கு ஒன்று என ஒரு நாளுக்கு 600 கேபிள்-ஐ 600 போன் கேஸ் உடன் 1200 ஸ்கூரூ கொண்டு இணைக்க வேண்டும். இல்லையெனில் செயல்திறன் குறைபாடு என அறிவித்துச் சம்பளம் கட் செய்யப்படும். ஒவ்வொரு அசம்பிளி லைனில் இருக்கும் ஊழியர்களைக் கண்காணிக்க அதிக எண்ணிக்கையிலான சூப்பர்வைசர்கள் உள்ளனர்.

இயந்திரத்தை போல வேலை செய்யும் முறை, பாத்ரூம் கூடப் போக முடியாத நிலை, சமீபத்திய காலத்தில் சம்பளம் கிடைப்பத்தி தாமதம், ஊழியர்களுக்கான மரியாதை இல்லாமல் அடிமை போல் நடத்தும் சூப்பர்வைசர். இதை எதுமே கண்டுகொள்ளாமல் வர்த்தகம், லாபத்தை மட்டுமே பார்க்கும் நிர்வாகம் எனச் சீன பாக்ஸ்கான் தொழிற்சாலையில் நடக்கும் கொடுமைகளைப் பட்டியலிட்டு உள்ளது இந்தக் ஆய்வு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com