கைத்தறிச் சேலை அணிந்து 42.5 கி.மீ தூரம் இங்கிலாந்து மாரத்தான் ஓடி அசத்திய ஒதிஷா பெண்!

கைத்தறிச் சேலை அணிந்து 42.5 கி.மீ தூரம் இங்கிலாந்து மாரத்தான் ஓடி அசத்திய ஒதிஷா பெண்!

சம்பல்புரி கைத்தறி புடவை உடுத்தி, இங்கிலாந்தைச் சேர்ந்த ஒதிஷா பெண் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை மான்செஸ்டரில் 42.5 கிமீ மாரத்தான் ஓடியபோது, தனது சக ஓட்டப்பந்தய வீரர்களை பிரமிப்பில் ஆழ்த்தினார், மேலும் ஒதிசா மக்கள் பெருமைப்பட்டனர்.

நாற்பத்தொரு வயதான மதுஸ்மிதா ஜெனா மாரத்தானை 4 மணி 50 நிமிடங்களில் நிறைவு செய்தார். இவர், மான்செஸ்டரில் ஒரு உயர்நிலைப் பள்ளி ஆசிரியை, அவர் வட மேற்கு இங்கிலாந்து ஒதிசா சமூகத்தின் ஆர்வமிகு உறுப்பினர்.

அதுமட்டுமல்ல மதுஸ்மிதா ஜெனா, உலகம் முழுவதும் பல மாரத்தான் மற்றும் அல்ட்ரா மாரத்தான்களில் பங்கேற்றுள்ளார். ஆனால், மதுஸ்மிதா சேலை அணிந்து மாரத்தான் போட்டியில் பங்கேற்றது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. “சேலை அணிந்து மாரத்தான் ஓடிய ஒரே நபர் நான் தான். இத்தனை நீண்ட நேரத்திற்கு ஓடுவது என்பதே ஒரு சவாலான பணி, அதிலும் சேலையில் அவ்வாறு ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்வது என்பது இன்னும் கடினமானது. ஆனால், முழு தூரத்தையும் 4.50 மணி நேரத்தில் முடிக்க முடிந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று ஊடகங்களிடம் பேசும்போது மதுஸ்மிதா மகிழ்ச்சியுடன் கூறினார்.

மதுஸ்மிதா தனது தாய் மற்றும் பாட்டியிடம் இருந்து தனக்கான உத்வேகத்தைப் பெற்றதாகக் கூறுகிறார், அவர் வளர்ந்து வரும் போது அவர்கள் இருவரும் தினமும் புடவை அணிவதைப் பார்த்தார். "பெண்கள் புடவை அணிந்து ஓட முடியாது என்று பலர் நம்புகிறார்கள், ஆனால் சம்பல்புரி கைத்தறிப் புடவை அணிந்து மாரத்தான் ஓடியதின் மூலம் நான் அவர்களது எண்ணம் தவறு என நிரூபித்தேன். இங்கிலாந்தில் கோடை காலத்தில் நான் எப்போதும் புடவை அணிவேன், ”என்கிறார் மதுஸ்மிதா. 41 வயதான இவரது குடும்பம் ஒதிசா, கேந்திரபாராவிலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ள குசுபூர் கிராமத்தைச் சேர்ந்தது.

“கடந்த ஆண்டு UK மாநாட்டின் ஒதிசா சொசைட்டியில் விளையாட்டுத் திறமைக்காக மதுஸ்மிதா பாராட்டப்பட்டார். அவர் எப்போதும் புதிய சாதனைகளால் நம்மை ஊக்குவிக்கிறார், ஆனால் இந்த முறை அவர் சேலையில் ஓடி ஒரு கூடுதல் மைல்கல்லை நாட்டிச் சென்றிருக்கிறார். இங்கிலாந்தின் ஒட்டுமொத்த ஒதிசா சமூகமும் அவரது சாதனைகளால் பெருமிதம் கொள்கிறது” என்று யுகே ஸ்ரீ ஜெகநாத் சொசைட்டியின் அறங்காவலரும், இங்கிலாந்தின் ஒதிசா சொசைட்டியின் முன்னாள் செயலாளருமான சுகந்த் குமார் சாஹு கூறினார். மதுஸ்மிதாவின் கணவர் சச்சின் தாஸ் எகிப்தில் பணிபுரிகிறார். இவரது

சாதனையால் அவரது தந்தை நிரேந்திர மோகன் ஜெனா மற்றும் இரண்டு மகன்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com