ChatGPT செய்த தவறை ஒப்புக் கொண்ட Open AI !

ChatGPT செய்த தவறை ஒப்புக் கொண்ட Open AI !

சமீபத்தில் ChatGPT-ஐ உருவாக்கிய OpenAI நிறுவனம், இந்த தொழில்நுட்பத்தில் உள்ள தவறு ஒன்றை சுட்டிக்காட்டி, அது பற்றிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு ChatGPT பயன்பாடு சில மணி நேரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பயனர்களின் அரட்டைப் பகுதி முற்றிலுமாக சில மணி நேரங்கள் முடக்கப்பட்டது. இதுகுறித்து OpenAI நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ChatGPTல் ஏற்பட்ட பிழையே இதற்குக் காரணம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பிழையால், சில பயனர்கள் என்ன தேடினார்கள் என்று பிற பயனர்களால் பார்க்க முடிந்ததாகவும், மேலும் இதை சந்தா கட்டணத்தில் பயன்படுத்தியவர்களின் கட்டணம் தொடர்பான விவரங்களை பிறருக்கு தெரியப்படுத்தியதாகவும் கூறினார்கள்.

மேலும் இந்த பிழையால், சில பயனர்களின் கிரெடிட் கார்டின் இறுதி நான்கு இலக்கங்கள் உட்பட பிற பயனர்களின் தனிப்பட்ட தகவலையும் சிலரால் பார்க்க முடிந்தது. இது குறித்த அந்நிறுவனமே நடத்திய ஆழமான விசாரணையில், 1.2% ChatGPT Plus சந்தாதாரர்களின் பணம் செலுத்துதல் தொடர்பான தகவல்கள், தற்செயலாக பிறருக்குத் தெரிந்த பிழையையும், சில பயனர்கள் ChatGPTஐ விட்டு வெளியேறும் தருவாயில், மற்றொரு பயனருடைய பெயர், முகவரி, கட்டண விவரம், மின்னஞ்சல் முகவரி, கிரெடிட் கார்டு எண் மற்றும் காலாவதியாகும் தேதி வரை பிறரால் பார்க்க முடிந்ததையும் OpenAI நிறுவனமே ஒப்புக்கொண்டுள்ளது.

சொற்பமான பயனர்களின் தரவுகளே பிறருக்கு காட்டப்பட்டுள்ளதால் இதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் எனவும். இந்த பிழைகள் காட்டப்பட்ட கிரெடிட் கார்டு விவரங்கள் கடைசி நான்கு இலக்கங்கள் மட்டுமே தவிர முழு கிரெடிட் கார்டு எண்களும் பிறருக்கு காட்டப்படவில்லை என்றும் இனிவரும் காலங்களில் ChatGPT பிளஸ் பயனர்கள் மேலும் சில விஷயங்களையும் செய்தால் தான் தங்களுக்கு வேண்டிய தரவை அணுக முடியும் என்றும் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஓபன் சோர்ஸ் லைப்ரரியில் ஏற்பட்ட பிழையே இதற்கு முக்கிய காரணம். சில தினங்களுக்கு முன்பு இந்த தொழில்நுட்பத்தை ஆஃப் லைனில் எடுத்தபோது, சில பயனர்களுக்கு இந்தப் பிழை ஏற்பட்டுள்ளது. ஒரே அலைவரிசையில் இருந்த இரு பயனர்களின் விவரங்கள் இந்த பிழை காரணமாக மற்றொருவருக்குத் தெரிந்திருக்கிறது.

தற்போது இந்த பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டதாகவும். இனி ஒருவரின் அரட்டைகளை வேறு யாராலும் பார்க்க முடியாது என்பது போலவும் OpenAI நிறுவனம் உறுதியளித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com