டெல்லியில் சுகாதார அதிகாரிகளுடன் கொரோனா பரவல் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

டெல்லியில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி மாலை 4.30 மணி முதல் ஆலோசனை நடத்தி வருகிறார்

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், டெல்லியில் இன்று மாலை பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்கிறார் என தகவல்கள் வெளியாகியது.

நாட்டில் கொரோனா பரவல் வேகம் மீண்டும் அதிகரித்துள்ளது. 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் ஆயிரத்து 134 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 26 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 24 மணிநேரத்தில் 5 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். குறிப்பாக டெல்லி, சத்தீஸ்கர், குஜராத், மகாராஷ்ட்ரா மற்றும் கேரளாவில் கொரோனா உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன. தினசரி கொரோனா பரவலின் வீதமும் 1 .9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், டெல்லியில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி மாலை 4.30 மணிக்கு ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா மேலும் பரவாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 662 பேர் கொரோனாவைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,41,60,279 பேர். அதேநேரத்தில் இந்தியாவில் இன்று காலையுடனான கடந்த 24 மணி நேரத்தில் 1,134 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1000-த்தை தாண்டியுள்ளது. நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு விகிதம் 1.09% வாராந்திர பாதிப்பு விகிதம் 0.98% ஆகும்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,000-த்தை தாண்ட தொடங்கியுள்ளதால் பல்வேறு மாநிலங்களும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பிரதமர் மோடி இன்று மாலை 4.30மணிக்கு துறைசார் செயலாளர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம், கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்காக முன்னெச்சரிக்கை செயல்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com