ராணி எலிசபெத் இறுதிச் சடங்கு

ராணி எலிசபெத் இறுதிச் சடங்கு

உலக தலைவர்கள் பங்கேற்பு



ராணி இரண்டாம் எலிசபெத் அவர்களின் இறுதிச்சடங்கில்  உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் அரசகுடும்பத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்த இறுதிசடங்கில் கலந்து கொள்பவர்கள் குறித்த தகவல் பட்டியலும் வெளியாகிவருகிறது.  இந்த நிகழ்விற்காக இஙாகிலாந்தில் இரண்டாயிரம் பேர் தங்குவதற்கான இடவசதிகள் செய்யப்பட்டுள்ளது.



இங்கிலாந்து வரலாற்றில் மிக நீண்டகாலம் ராணியாக இருந்தவர் என்ற பெருமை பெற்றவர் இரண்டாம் எலிசபெத் ஆவார் . இவர் வயது முதிர்வு மற்றும் உடல்நல குறைவின் காரணமாக பக்கிங்ஹாம் அரண்மனையில் ஓய்வெடுத்து வந்த அவர் தனது 96 வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பாவில் உள்ள பல்வேறு அரச குடும்பத்தை சார்த்தவர்களும் ராணி எலிசபெத்தின் இறுதிசடங்குகளில் பங்கேற்று அவருக்கு இறுதி மரியாதை செலுத்த உள்ளனர்.-

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com