இஸ்ரேலில் காணாமல் போன கேரள விவசாயி மீட்பு!

இஸ்ரேலில் காணாமல் போன கேரள விவசாயி மீட்பு!

இஸ்ரேலில் காணாமல் போன கேரள விவசாயி பிஜு குரியன் நாடு திரும்பினார்.

ஃபிப்ரவரி 17 அன்று, தூதுக்குழு கேரளாவுக்குத் திரும்பத் திட்டமிடப்பட்ட நாளில் பிஜு குரியன் இஸ்ரேலில் இருந்து காணாமல் போனார்.

28 பேர் கொண்ட மாநில அரசுக் குழுவின் ஒரு பகுதியாக இஸ்ரேலில் காணாமல் போன கண்ணூர் இரிட்டியைச் சேர்ந்த விவசாயி பிஜு குரியன் திங்கள்கிழமை காலை கரிப்பூர் விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் அவர் தனது வீட்டின் முன்பு செய்தியாளர்களிடம் கூறுகையில், தான் நாடு கடத்தப்படவில்லை, விருப்பத்துடனே அங்கு தங்கி விட்டு பின்னர் திரும்பி வந்தேன், என்றார்.

48 வயதான பிஜு குரியன் பத்திரமாகத் திரும்பியதை அடுத்து, கேரள மாநில அரசு நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது. பிஜூ குரியன், டெல் அவிவ் நகரில் இருந்து பஹ்ரைன் வழியாக கரிப்பூர் விமான நிலையத்துக்கு அதிகாலை 4 மணிக்கு கல்ப் ஏர் விமானம் மூலம் வந்தார். கண்ணூர் விமான நிலையத்தில் அவரை வரவேற்க வழக்கறிஞர் பென்னி குரியன் காத்திருந்தார். "நான் தானாக முன்வந்து திரும்பினேன், யாரும் என்னை நாடு கடத்தவில்லை. எனது விமான டிக்கெட் செலவை எனது சகோதரர்தான் கொடுத்தார். நான் இஸ்ரேலில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதற்காக அங்கே தங்கியிருந்து விட்டுப் பின்னர் இப்போது திரும்பினேன்", என்றார் பிஜு குரியன்.

துல்லியமான விவசாயம் மற்றும் ஹைட்ரோபோனிக்ஸ் உள்ளிட்ட நவீன விவசாய முறைகள் குறித்து அறிந்து கொள்வதற்கான பயிற்சித் திட்டம் ஒன்றில் கலந்து கொள்ள பிஜி குரியன் தேர்வாகி இருந்தார். இந்த பயிற்சியானது ஐந்து நாட்கள் நடைபெற்றது. அரசு நிதியுதவி பெற்று நடத்தப்படும் இந்த பயிற்சி திட்டத்தில் கலந்து கொள்ள 28 பேர் கொண்ட விவசாயிகளின் பிரதிநிதிகள் குழு ஒன்று தயாரானது. இதற்கு கேரள மாநில வேளாண்மை உற்பத்தி ஆணையர் பி அசோக் தலைமை தாங்கினார். இவர்களது குழு ஃபிப்ரவரி 7 அன்று கேரளா திரும்பத் திட்டமிட்டது.

ஆனால், தூதுக்குழு கேரளாவுக்குத் திரும்பத் திட்டமிடப்பட்ட நாளில் பிஜு குரியன் இஸ்ரேலில் இருந்து காணாமல் போனார். இந்த விவகாரத்தை கையாளும் பொறுப்பை மாநில அரசிடம் இருந்து மத்திய அரசு எடுத்துக் கொண்டதிலிருந்து, பிஜு குரியன் தலைமறைவானதை இஸ்ரேல் அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டது. இது டெல் அவிவில் உள்ள இந்திய தூதரகம் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வழிவகுத்தது.

இஸ்ரேல் காவல்துறையான மொசாட் பிரிவினர், பிஜு குரியனை இஸ்ரேலில் உள்ள ஒரு கிராமத்தில் கண்டுபிடித்துள்ளனர், அந்த கிராமத்தில் கணிசமான அளவில் மலையாளிகள் வசித்து வந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் சுகாதாரப் பணியாளர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியா திரும்பிய பிஜூ குரியன் மீது எவ்வித சந்தேகக் கண்ணோட்டமும் இல்லாத காரணத்தால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்று இஸ்ரேல் பிரதமருக்கு மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

காணாமல் போனதற்கான விளக்கம் பெறுவதற்காக அவர் போலீஸ் முன் ஆஜர்படுத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்த பின் விடுவிக்கப்படுவார் என காவல்துறை தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com