ரஷ்ய அதிபர் புடின்
ரஷ்ய அதிபர் புடின்

மாளிகை படிக்கட்டில் தவறி விழுந்த ரஷ்ய அதிபர் புடின்!

ரஷ்ய அதிபர் மாளிகையின் படிக்கட்டுகளில் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் (70) தவறி விழுந்ததாகவும், அவரது உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ரஷ்ய அதிபர்  புடின் உடல்நிலை குறித்து பல்வேறு செய்திகள் பரவி வரும் நிலையில், கடந்த மாதம் அவர்  கியூபா அதிபர் மிகைல் டியாஸ் கனேலை சந்தித்து பேசினார். அப்போது புடினின் கைகள் நடுங்கிக் கொண்டிருந்ததாகவும், புற்றுநோய் காரணமாக அவரது உள்ளங்கை ஊதா நிறத்தில் காணப் பட்டதாகவும் பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்நிலையில் அதிபர் புடின் இப்போது மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகை படிக்கட்டுகளில் இறங்கி வரும்போது, படிக்கட்டில் தவறி விழுந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அதிபர் புடினின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பிரிட்டன் உளவுத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com