காதலர் தினத்தில் சிங்கிளாக இருக்கும் ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

காதலர் தினத்தில் சிங்கிளாக இருக்கும் ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜெனரல் லூனா நகர மேயர் மாட் புளோரிடோ, காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் சிங்கிளாக இருக்கும் ஊழியர்கள் கூடுதல் நேரம் பணிபுரிந்ததற்காக, தனது பாராட்டுக்களோடு கூடுதல் போனசும் வழங்கி அசத்தியுள்ளார்.

அதிலும், 5 ஆண்டுகளுக்கும் மேல் ஊழியர்கள் சிங்கிளாக இருக்கும்பட்சத்தில் அவர்ளது தினசரி ஊதியம் மூன்று மடங்காகவும், மற்றவர்களுக்கு இரட்டிப்பு ஊதியமாகவும் வழங்கப்படுகிறது. அப்படி இல்லையெனில் ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மேயர் மாட் புளோரிடோ கூறும்போது, "பொதுவாக, காதலர் தினத்தன்று சிங்கிள்கள் என்ன செய்வார்கள் என்பதை நான் அறிவேன். காதலர் தினத்தில் அவர்களுக்கு ஸ்பெஷலாக யாரும் சாக்லேட்களோ, அல்லது பூக்களோ கொடுக்க மாட்டார்கள். அவர்களின் உணர்வுகளை நான் அறிவேன். அதனால் அவர்களுக்கு இதுபோன்ற ஊக்கத்தொகை கொடுக்கும்பட்சத்தில், யாராவது நம்மை கவனிக்கிறார்கள், நம்மையும் நேசிக்கிறார்கள் என்ற உணர்வு அவர்களுக்குள் ஏற்படும்'' என்றார்.

மேயர் மாட் புளோரிடோ, தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இதுபோன்று காதலர் தின போனஸை சிங்கிளாக இருக்கும் ஊழியர்களுக்கு வழங்கி வருகிறார். இதேபோல், 289 டவுன்ஹால் ஊழியர்களில், 37 பேர் தாங்கள் சிங்கிள் தான் என்பதை உறுதி செய்து, அதன்பின் இந்த ஊக்கத்தொகைக்கு தகுதி பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com