படகு விபத்து
படகு விபத்து

வியட்நாமில் பிடிபட்ட இலங்கை அகதிகள் ! ஐநா விடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தல்!

வியட்நாம் சிங்கப்பூர் எல்லையில் படகு ஒன்று விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 303 பேரும் இலங்கையர்களென தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு வியட்நாம் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியின் சட்டத்தரணி அலி சப்ரியும் இச்செய்தியினை உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்று அகதிகள் என சந்தேகிக்கப்படும் 303 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்று வியட்நாம்-சிங்கப்பூர் எல்லையில் மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. 303 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற இந்த இலங்கை மீன்பிடிக் கப்பல் நேற்று வியட்நாம் மற்றும் சிங்கப்பூருக்கு அருகிலுள்ள கடலில் விபத்துக்குள்ளானது.

கப்பல் ஆபத்தில் சிக்கியபோது, ​​அங்கிருந்த இலங்கையர் ஒருவர் இலங்கை கடற்படை மீட்பு நடவடிக்கை மையத்தை தொடர்புகொண்டு, படகு கடலில் விபத்துக்குள்ளானது.குறித்து தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவர்கள் இது தொடர்பாக வியட்நாம் கடற்படை மீட்பு நடவடிக்கை மையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அப்போது வியட்நாமிய பிரதேசத்தில் இருந்து 258 கடல் மைல் தொலைவில் கப்பல் சென்று கொண்டிருந்ததாக வியட்நாம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மீட்பு கப்பல்
மீட்பு கப்பல்

அதன்பின்னர், வியட்நாம் சிங்கப்பூர் மற்றும் மலேசியா அரசாங்கங்களைத் தொடர்புகொண்டு குறித்த கப்பல் குறித்த தகவல்களைப் பரிமாறிக்கொண்டது.

இது தொடர்பில் அருகில் பயணித்துக்கொண்டிருந்த ஜப்பானிய கப்பலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், அவர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பின்னர், கப்பலில் இருந்தவர்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதில் பயணித்த 303 பேரும் இலங்கையர்களென தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பும் பணியினை வியட்னாம் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. ஆனால் அதில் பயணித்த இலங்கையர்கள் திருப்பவும் இலங்கை செல்ல விருப்பமில்லை என தெரிவித்து வருகின்றனர். அவர்கள் கனடா செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். இது குறித்து இலங்கையிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது வியட்னாம் அரசாங்கம். பிடிபட்ட இலங்கையர்கள் தங்களை ஐ நா விடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com