ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பாடல்களில் விமர்சித்த இசைக்கலைஞர் தனது 35வது வயதில் மரணம்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பாடல்களில் விமர்சித்த இசைக்கலைஞர் தனது 35வது வயதில் மரணம்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை தனது பாடல்களில் விமர்சித்த ரஷ்ய இசைக்கலைஞர் ஒருவர் ஆற்றைக் கடக்கும்போது பனியில் விழுந்து இறந்ததாக வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 35 வயதான டிமா நோவா, அவரது உண்மையான பெயர் டிமிட்ரி ஸ்விர்குனோவ், பிரபலமான எலக்ட்ரானிக் இசைக்குழுவான கிரீம் சோடாவின் நிறுவனர் ஆவார்.

ஊடக அறிக்கையின்படி, நோவா தனது சகோதரர் மற்றும் மூன்று நண்பர்களுடன் மார்ச் 19 அன்று உறைந்த வோல்கா நதியைக் கடந்து கொண்டிருந்தபோது உடைந்த பனிக்கட்டி வழியாக நதியின் உறைபனி நீரில் விழுந்து மூழ்கினார் என்று தெரிய வந்தது. அவரது நண்பர்கள் இருவர் பனிக்கட்டிக்கு அடியில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், இவர் மட்டும் ஆம்புலன்சில் இறந்தார்என்று கூறப்படுகிறது.

இறந்த இசைக்கலைஞர் குறிப்பிடத்தக்க வகையில், தனது பாடல்களில் ரஷ்ய அதிபர் புடினை அடிக்கடி விமர்சித்தார் மற்றும் ரஷ்யாவில் போர் எதிர்ப்பு போராட்டங்களின் போது அவரது இசை ஒரு கீதமாக பயன்படுத்தப்பட்டது. அவரது மிகவும் பிரபலமான மற்றும் சர்ச்சைக்குரிய பாடல் "அக்வா டிஸ்கோ" ஆகும், இது மாஸ்கோவின் உக்ரைன் படையெடுப்பிற்கு எதிரான போராட்டங்களில் அடிக்கடி பாடப்பட்டது. தனது பாடலில், திரு நோவா ரஷ்ய ஜனாதிபதியின் 1.3 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட மாளிகையையும் விமர்சித்தார். இந்த எதிர்ப்புக்கள் இறுதியில் "அக்வா டிஸ்கோ பார்ட்டிகள்" என்று அறியப்பட்டது.

இன்ஸ்டாகிராம் பதிவில், கிரீம் சோடா திங்களன்று அவரது மரணத்தை உறுதிப்படுத்தியது, "இன்றிரவு எங்களுக்கு ஒரு சோகம் ஏற்பட்டது. நண்பர்களுடன் இணைந்து உறைபனி ஆறான வோல்காவைக் கடக்க முயன்ற போது எங்கள் டிமா நோவா வோல்கா ஆற்றின் பனிக்கட்டியின் கீழ் விழுந்தார்.அவரை காப்பாற்ற முடியவில்லை. எங்கள் நண்பரான அரிஸ்டார்கஸ், அவரும் பனிக்கட்டியின் கீழ் விழுந்தார், ஆனால், காப்பாற்றப்பட்டு விட்டார். துரதிருஷ்டவசமாக டிமாவைத்தான் காப்பாற்ற முடியவில்லை. என்று அவர்களது பதிவு கூறுகிறது.

மற்றொரு இன்ஸ்டாகிராம் பதிவில், குழு திரு நோவா மற்றும் அவரது நண்பர் கிசெலெவ் ஆகியோரின் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டது, "இன்று 9:00 மணிக்கு அதிகாரப்பூர்வ அடையாளம் நடந்தது. டிமாவும் கோஷியும் இப்போது இல்லை எனும் தகவலை அவர்கள் அதில் பகிர்ந்து கொண்டிருந்தனர்.

2021 ஆம் ஆண்டில் நகைச்சுவை நடிகர் அலெக்சாண்டர் குட்கோவ் அவர்களின் பாடல்களில் ஒன்றைப் பயன்படுத்தி ரஷ்ய ஜனாதிபதியின் "புட்டின்

அரண்மனை" என்று பெயரிடப்பட்ட அவரது ஆடம்பர மாளிகையை கேலி செய்தபோது இந்த இசைக்குழுவானது மக்களிடையே பெரும் புகழ் பெற்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com