அடுத்த ஐந்து ஆண்டுகள் வெப்பமான காலகட்டமாகவே இருக்கலாம்: ஐ.நா!

அடுத்த ஐந்து ஆண்டுகள் வெப்பமான காலகட்டமாகவே இருக்கலாம்: ஐ.நா!

அடுத்து வர இருக்கும் 2023 முதல் 2027 வரையிலான 5 ஆண்டு காலகட்டமானது இதுவரை பதிவு செய்யப்படாத வகையிலான கடுமையான வெப்பம் கொண்ட ஐந்தாண்டு காலமாக இருக்கும் என்பது தற்போது உறுதியாகிவிட்டது, பசுமை இல்ல வாயுக்களும் எல் நினோவும் இணைந்து வெப்பநிலையை உயர்த்துவதால் அப்படி ஆக அதிக அளவிலான வாய்ப்புகள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு புதன்கிழமை எச்சரித்தது.

உலக வெப்பநிலை என்பது கூடியவிரைவிலேயே பாரிஸ் காலநிலை ஒப்பந்தங்களில் நிர்ணயிக்கப்பட்ட லட்சிய இலக்கை விட மிக அதிகமாக இருக்கும், அடுத்த ஐந்தாண்டுகளில் அவ்வாறு நடக்க மூன்றில் இரண்டு பங்கு வாய்ப்புகள் உள்ளன என்று ஐநாவின் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், 2015 மற்றும் 2022 க்கு இடையில் பதிவு செய்யப்பட்ட முந்தைய எட்டு ஆண்டுகளும் கூட கடும் வெப்பநிலை நிலவும் ஆண்டுகளாகவே கணக்கிடப்பட்டிருந்தன. அதுவே தற்போது தாங்க முடியாத அளவுக்கு பின்விளைவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில் காலநிலை மாற்றம் என்பது இன்றைய நவீன யுகத்தில் மேலும்,மேலுமென குறைந்த வருடங்களிலேயே துரிதப்படுத்தப்படுவதால் வெப்பநிலை இன்னும் அதிகரித்து அதன் உச்சத்தைத் தொடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

"அடுத்த ஐந்தாண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு வருடமும், ஒட்டுமொத்த ஐந்தாண்டு காலமும், நம் கற்பனைக்கு எட்டாத வகையில் மிகவும் வெப்பமானதாக இருக்க 98 சதவீத வாய்ப்பு உள்ளது" என்று WMO கூறுகிறது.

2015 பாரிஸ் உடன்படிக்கையின்படி, உலக சராசரி வெப்பநிலையின் அதிகரிப்பை 2 டிகிரி செல்சியஸுக்கு கீழே வைத்திருக்க வேண்டும் அல்லது 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடர வேண்டும் என உலக நாடுகள் லட்சியம் கொண்டிருந்தன.

புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்த வேண்டுமெனில், கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வுகள் 2025 க்கு முன் உச்சத்தை எட்ட வேண்டும் என்பதோடு அது 2030 க்குள் 43% குறைய வேண்டும்.

ஆனால், இப்போது நடந்து கொண்டிருப்பதென்னவோ அதற்கு முற்றிலும் நேர்மாறான விஷயமாகவே கருதப்படுகிறது.

2022 இல் உலகளாவிய சராசரி வெப்பநிலை என்பது அதன் முந்தைய சராசரியை விட 1.15 டிகிரி செல்சியஸ் அதிகமாகவே இருந்தது.

அதே விதமாக 2023 முதல் 2027 வரையிலான 5 ஆண்டு காலகட்டங்களில் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு முந்தைய நிலைகளை விட வருடாந்திர உலகளாவிய மேற்பரப்பு வெப்பநிலை 1.5 ° C ஐ விட அதிகமாக இருக்க 66 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக WMO கூறியது, அந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொன்றிற்கும் 1.1 ° C முதல் 1.8 ° C வரை வெப்பநிலை அதிகரிப்பு இருக்கும் என ஐநா கூறுகிறது.

அதற்காக வெப்பமயமாதலில் உலகம் நிரந்தரமாக பாரிஸ் ஒப்பந்த அளவுகோலைத் தாண்டிவிடும் என்று இது அர்த்தப்படுத்தவில்லை என்றாலும், அதிகரிக்கும் அதிர்வெண்ணுடன் தற்காலிக அடிப்படையில் 1.5 டிகிரி செல்சியஸ் அளவை மீறுவோம் என்று WMO தொடர்ந்து எச்சரிக்கை மணி அடித்து வருகிறது.

"வரவிருக்கும் மாதங்களில் ஒரு வெப்பமயமாதல் எல் நினோ உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது மனிதனால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்துடன் இணைந்து உலகளாவிய வெப்பநிலையை பெயரிடப்படாத பகுதிக்கு தள்ளும்.

“இது சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, நீர் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழலுக்கு நீண்டகால பின்விளைவுகளை ஏற்படுத்தும். உலக நாடுகள் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

எல் நினோ என்பது மத்திய மற்றும் கிழக்கு பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடலில் மேற்பரப்பு வெப்பநிலையின் பெரிய அளவிலான வெப்பமயமாதல் ஆகும். இந்த வானிலை நிகழ்வானது பொதுவாக இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது.

எல் நினோவிற்கும் அதன் எதிர்மறை விளைவாகக் கருதப்படும் லா நினாவிற்கும் இடையில் நடுநிலை நிலைகளுடன் நிலைமைகள் ஊசலாடுகின்றன.

ஜூலை இறுதிக்குள் எல் நினோ உருவாகும் வாய்ப்பு 60 சதவீதமாகவும், செப்டம்பர் இறுதிக்குள் 80 சதவீதமாகவும் இருக்கும் என்று WMO இந்த மாத தொடக்கத்தில் கூறியது.

பொதுவாக, எல் நினோ வளர்ச்சியடைந்த வருடத்தில் உலகளாவிய வெப்பநிலையை அதிகரிக்கிறது - அதே சமயம் லா நினோ குளிர்ர்சியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆக வரவிருக்கும் 5 ஆண்டுகாலகட்டங்களில் எல் நினோ ஆண்டு 2024 ஆக இருக்கும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் லா நினா நிலைமைகளின் குளிர்ச்சியான தாக்கம் இருந்தபோதிலும், பதிவு செய்யப்பட்ட வெப்பமான எட்டு ஆண்டுகள் அனைத்தும் 2015 இல் இருந்து, 2016 இல் வெப்பமயமானதாகவே இருந்தது.

2023 மற்றும் 2027 க்கு இடையில் ஒரு வருடம் 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பை மீறுவதற்கு 66 சதவீத வாய்ப்புகள் இருந்தாலும், முழு ஐந்தாண்டு சராசரியும் அவ்வாறு செய்ய 32 சதவீத வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"உலகளாவிய சராசரி வெப்பநிலை தொடர்ந்து அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, மேலும் நாம் பழகிய காலநிலையிலிருந்து நம்மை மேலும் மேலும் அது தூர நகர்த்துகிறது" என்று வானிலை அலுவலக நிபுணர் விஞ்ஞானி லியோன் ஹெர்மன்சன் கூறினார்.

அலாஸ்கா, தென்னாப்பிரிக்கா, தெற்காசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளைத் தவிர அனைத்துப் பகுதிகளிலும் 2023-ல் வெப்பநிலை 1991-2020 சராசரியை விட அதிகமாக இருக்கும் என்று WMO தெரிவித்துள்ளது.

அதே சமயம் தென் பசிபிக் பெருங்கடலின் சில பகுதிகள் சராசரியை விட குளிர்ச்சியாக இருக்கும் என்றும் ஐநா எச்சரித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com