இந்தியாவிலிருந்து மொத்தமாக காலி செய்த டிக்டாக் நிறுவனம்! மிச்ச சொச்ச ஆட்களையும் நீக்கியது!

இந்தியாவிலிருந்து மொத்தமாக காலி செய்த டிக்டாக் நிறுவனம்! மிச்ச சொச்ச ஆட்களையும்  நீக்கியது!

இந்தியாவில் டிக்டாக் செயலி கொடிக்கட்டி பறந்து வந்த நிலையில் பல ஆயிரம் ஊழியர்களை இந்தியாவில் பல அலுவலகங்களில் நியமித்து பெரும் வர்த்தக சந்தையை உருவாக்கி வந்தது. இதன் தொடர்ச்சியாக டிக்டாக் தடை செய்யப்பட்டு நிலையில் கிட்டத்தட்ட 6 மாதத்திற்கு பின்பு ஊழியர்களை பணிநீக்கம் செய்தது .

மத்திய அரசு இந்திய மக்கள் தனிநபர் பாதுகாப்பு காரணமாக இரண்டு வருடத்திற்கு முன்பு சீன செயலிகளை தடை செய்து இந்திய ப்ளே ஸ்டோரில் இருந்து மொத்தமாக நீக்கியது. இதில் டிக்டாக் உட்பட பல முன்னணி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.

இந்தியாவில் டிக்டாக் தடை செய்யும் போது சுமார் 200 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டு, அதன் மிகப்பெரிய வெளிநாட்டு வர்த்தக சந்தையாக இருந்தது. டிக்டாக் தடை செய்யப்பட்ட பின்பு இந்தியாவில் சிறிதும், பெரியதுமாக பல ஷாட் வீடியோ செயலிகள் உருவாகி வருகிறது.

டிக்டாக் நிறுவனம் இந்திய சந்தையில் ஷாட் வீடியோ தாண்டி மியூசிக் சேவை மற்றும் இதர பல சேவைகளையும், வர்த்தகத்தையும் வைத்திருந்தது. இதற்காக இந்தியாவில் ஒரு அலுவலகத்தையும் சில ஊழியர்களையும் வைத்திருந்தது. இந்நிலையில் TikTok இந்த வார தொடக்கத்தில் இந்திய பணியாளர்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2 வருடமாக இந்தியாவில் டிக்டாக் திரும்ப வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட நிலையிலும், மியூசிக் மற்றும் பிற நாடுகளுக்கு சேவைகளை அளித்து வந்த நிலையில் தற்போது மொத்தமாக இந்திய வர்த்தகத்தை மூடிவிட்டு வெளியேற முடிவு செய்துள்ளது பையிட்டான்ஸ் நிர்வாகம்.

இந்திய டிக்டாக் அலுவலகத்தில் இதுநாள் வரையில் பணியாற்றி வந்த 40 ஊழியர்களுக்கும் திங்கள்கிழமை அழைத்து அனைவருக்கும் பிங்க் ஸ்லிப் வழங்கப்பட்டு உள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து ஊழியர்களும் 3 - 9 மாதங்கள் வரையிலான பணிநீக்க ஊதியம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இனி சீன செயலிகள் குறித்த இந்திய அரசின் நிலைப்பாட்டின் காரணமாக, இந்தியாவில் அதன் செயல்பாடுகள் மீண்டும் தொடங்குவது சாத்தியம் இல்லாத நிலையில் 40 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்து இந்தியாவிலிருந்து மொத்தமாக வெளியேறியுள்ளது .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com