அதிபர் ஜெலன்ஸ்கி
அதிபர் ஜெலன்ஸ்கி

பேச்சுவார்த்தைக்கு இடமில்லை! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டம்!

ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை நீடிக்கிறது. உக்ரைனின் 4 நகரங்களை கைப்பற்றிய ரஷ்யா அதை தன்னுடன் இணைத்துக்கொண்டதாக அறிவித்தது பெரும் சச்சரவை ஏற்படுத்தி இருக்கிறது.

ரஷ்யா தேவை ஏற்பட்டால் அணு ஆயுதத்தையும் பயன் படுத்துவோம் எனவும் எச்சரித்திருக்கிறது. ஐ.நா-வில் ரஷ்யாவுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா புறக்கணித்து நடுநிலை வகித்தது. அதைத் தொடர்ந்து, நேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி-யுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசியில் பேசினார்.

போர்
போர்

" அமைதி வழியில் இந்த போருக்கு தீர்வு காண வேண்டும் , போரினால் அணுசக்தி நிலையங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அது சுற்று சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் , அதனால்,தூதரகம் மூலம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதற்கு பதிலளித்த உக்ரைன் பிரதமர், "இந்தியா மனிதாபிமான முறையில் உக்ரைன் மக்களுக்கு செய்த அனைத்து உதவிகளுக்கு நன்றிகள்.

ரஷ்யா  மற்றும் உக்ரைன் போர்
ரஷ்யா மற்றும் உக்ரைன் போர்

உக்ரைன், இந்தியாவின் உறவை வலுபடுத்துவதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. அதே நேரம், ரஷ்யா ஆக்கிரமித்த எங்கள் பகுதிகளை இணைத்துக்கொள்வதாக அறிவித்திருக்கிறது. பல முறை பேச்சுவார்த்தைக்கு முயன்றும் தீர்வு எட்டப்படவில்லை. அதனால் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை" என உக்ரைன் அதிபர் கருது தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com