அரைமணி நேரத்தில் 1300 பேரை வீட்டுக்கு அனுப்பிய zoom!

அரைமணி நேரத்தில் 1300 பேரை வீட்டுக்கு அனுப்பிய zoom!

சமீபத்திய காலமாக சர்வதேச அளவில் பணி நீக்கம் என்பது மிகப்பெரிய அளவில் இருந்து வருகின்றது. இன்று எந்த கம்பெனி எவ்வளவு பேரை வீட்டுக்கு அனுப்பும் என்று டெக்னாலஜி ஊழியர்கள் கலக்கத்தில் இருந்து வருகின்றனர். உலகின் முன்னணி நிறுவனங்களான மைக்ரோசாப்ட், ட்விட்டர், பேஸ்புக், அமேசான் என பல முன்னணி நிறுவனங்களும், மிகப்பெரிய அளவில் பணி நீக்கம் செய்துள்ளன என்பது பொருளதாதர துறையை தற்போது கலக்கத்தில் வைத்துள்ளது.

இந்த பணி நீக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஜூம் நிறுவனமும் தற்போது பணி நீக்க நடவடிக்கையினை கையில் எடுத்துள்ளது. இது குறித்து ஜூம் நிறுவனத்தின் தலைமை செயல் அதியாரியான எரிக் யுவான், நீங்கள் அமெரிக்காவினை சேர்ந்த ஊழியர் என்றால், அடுத்த 30 நிமிடங்களில் உங்களது மெயிலை செக் செய்யுங்கள். அதில் பணி நிக்கம் தொடர்பான அறிவிப்பு வந்திருக்கும் என்றும் கூறியுள்ளார். ஜூம் நிறுவனம் தனது மொத்த ஊழியர் தொகுப்பில் சுமார் 15% ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய காலமாக, குறிப்பாக கொரோனாவின் வருகைக்கு பிறகு ஜூம் ஆப்பின் தேவை என்பது கணிசமாக உயர்ந்தது. பல நிறுவனங்களும் இந்த ஜூம் ஆப் மூலமாகவே அலுவலக சம்பந்தமான கூட்டங்கள், பள்ளிகள், கல்லூரிகள், முக்கிய கூட்டங்க்ள் என பலவும் கூட்டங்களை கூட்டின. சில நிறுவனங்கள் ஜூம் கால் மூலமாக பணி நீக்கம் செய்ததும் அப்போது சர்ச்சையானது. ஆனால் அத்தகைய ஜூம் நிறுவனத்திலேயே பணி நீக்கம் வரும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இது குறித்து ஜூமின் தலைமை செயல் அதிகாரியான எரிக் யுவான், சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் அதன் தாக்கத்தினை வாடிக்கையாளர்களும் உணரத் தொடங்கியுள்ளனர். ஆக இது ஒரு கடினமான காலம். ஆக இப்படி ஒரு கடினமான முடிவினை எடுக்க நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம் என வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். பணி நீக்கம் மட்டும் அல்ல, மற்ற ஊழியர்களுக்கு பெரும் சம்பள குறைப்பும் செய்துள்ளதாக எரிக் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com