நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி. ராமன் அவர்கள் சி.வி. ராமன் விளைவு கண்டறிந்த தினம் பிப்ரவரி 28 ஆகும். இந்தநாள் தேசிய அறிவியல் தினமாகப் போற்றப்படுகிறது. சூரியக் கதிர்களுள் நீலநிறக் கதிர்களே அதிக ஆற்றல் கொண்டவை. அதனால்தான் வானமும், கடலும் நீல வண்ணத்தில் காட்சி தருகின்றன என்ற உண்மையை நிரூபித்தவர் விஞ்ஞானி சர்.சி.வி. ராமன் அவர்கள்தான். – எஸ். ராஜம், ஸ்ரீரங்கம்