spot_img
0,00 INR

No products in the cart.

ஒமிக்ரான் வைரஸ் : தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் ஆலோசனை!

நாட்டில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதால், தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் போடுவது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் எனும் வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி 15 நாடுகளில் இந்த வைரஸ் பரவி விட்டது. இதுவரை இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் 32 பெருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ஒமிக்ரான் அச்சுறுத்தல் எதிரொலியாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு, குறிப்பாக ஒமிக்ரான் வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இந்திய விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயப்படுத்தப் பட்டுள்ளது. இந்த உத்தரவு கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த சில மாதங்களாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை அரசு முடுக்கி விட்டுள்ளது. வாரத்தில் ஒருநாள் நடத்தப்பட்டு வந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தற்போது வாரத்தில் இரண்டு நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், மேலும் பல்வேறு தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அரசு அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

Other Articles

Stay Connected

263,924FansLike
1,884FollowersFollow
3,230SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles

ஐபிஎல் மெகா ஏலம்: ஆலோசனையில் பங்கேற்க சென்னை வந்தார் தோனி!

0
ஐபிஎல் மெகா ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று சென்னை வந்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம்...

7,500 கோடி ரூபாய் முதலீடு: ஏர்டெல் நிறுவனத்தில் செய்தது கூகுள்!

0
ஏர்டெல் நிறுவனத்தில் பலவேறு திட்டங்களை செயல்படுத்தும் வகையில் நீண்டகால ஒப்பந்தமாக ரூ.7,500 கோடி கூகுள் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள ஏர்டெல் நிறுவனத்துடன் கூகுள் நிறுவனம் ரூ.7,500 கோடியை பல்வேறு...

பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்; செல்போனில் பதிவிறக்கம் செய்யலாம்!

0
இந்த ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1-ம் தேதி காகிதமில்லா முறையில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்; மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...

கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ஆனலைனில் நடத்தப்படும்; அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

0
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு இம்மாதம் 31-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், இதுகுறித்து நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அதன் பிறகு இன்று முதல் ஊரடங்கு தடை செய்யப்படும் என்றும் இனி...

64 வயதில் மருத்துவப் படிப்பு: ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு இன்று கலந்தாய்வுக்கு அழைப்பு!

0
சென்னையை அடுத்த நாவலூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் முனுசாமி சுப்பிரமணியன் 64 வயதான இவர் கடந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதையடுத்து, இன்று மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வுக்கு அழைக்கப் பட்டுள்ளார். கடந்த...